Indian athletes Dilip Gavit, Mohammed Fasil achieved winning medals in Commonwealth Para 100m race AI generated
விளையாட்டு

CWG 2026 : பாரா 100 மீட்டர் ஓட்டத்தில் இந்தியா சாதனை: ”தங்கம் வென்றார் திலீப் காவித், வெள்ளி வென்றார் முகமது பாசில்”!

காமன்வெல்த் பாரா 100 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர்கள் திலீப் காவித், முகமது பாசில் பதக்கம் வென்று சாதித்தனர்.

Kannan

காமன்வெல்த் போட்டிகள் - இந்தியா பதக்க வேட்டை

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 3 தங்கம், 9 வெள்ளி, 3 வெண்கலம் என இந்தியா இதுவரை 15 பதக்கங்கள் வென்றுள்ளது. இதன் மூலம் பதக்கப்பட்டியில் தற்போது 8-வது இடத்தில் உள்ளது இந்தியா.

ஆடவர் பாரா 100 மீட்டர்

இன்று அதிகாலை நடைபெற்ற ஆடவருக்கான பாரா 100 மீட்டர் டி47 பிரிவு ஓட்டத்தின் இறுதி சுற்று நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் முகமது பாசில் மற்றும் திலீப் பங்கேற்றனர்.

10.17 விநாடிகளில் கடந்து தங்கம்

பந்தய தூரத்தை 10.71 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார் திலீப். அதன் மூலம் அவர் தங்கம் வென்றார். இந்த தொடரில் இந்தியா வெல்லும் மூன்றாவது தங்கமாக இது அமைந்தது.

முன்னதாக, பளுதூக்குதலில் மீராபாய் சானு மற்றும் பாரா குண்டு எறிதலில் ஷர்மிளா தன்கர் ஆகியோர் தங்கம் வென்றிருந்தனர்.

இந்திய வீரருக்கு வெள்ளி

பாரா 100 மீட்டர் டி47 பிரிவு ஓட்டத்தில் பந்தய தூரத்தை 10.83 விநாடிகளில் கடந்து இரண்டாம் இடம் பிடித்த இந்தியாவின் முகமது பாசில் வெள்ளி வென்றார்.

இங்கிலாந்தின் கெவின் சாண்டோஸ் வெண்கல பதக்கத்தை தட்டிச் சென்றார்.

முரளி ஸ்ரீசங்கருக்கு வெள்ளி

நீளம் தாண்டுதலில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர், ஆடவர் பிரிவில் வெள்ளி வென்றார். 27 வயதான அவர், 8.09 மீட்டர் நீளம் தாண்டியதன் மூலம் பதக்கத்தை உறுதி செய்தார்.

பர்மிங்காம் (2022) காமன்வெல்த் விளையாட்டு போட்டியை தொடர்ந்து கிளாஸ்கோவிலும் அவர் வெள்ளி வென்றுள்ளார்.

ஜமைக்காவின் கெயில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். அவரை காட்டிலும் 0.6 மீட்டர் மட்டுமே முரளி ஸ்ரீசங்கர் பின்தங்கி இருந்தார்.

ஸ்காட்லாந்தை சேர்ந்த ஸ்டீபன் மெக்கன்சி வெண்கலம் வென்றார்.

===========