Indian Cricketer Deepti Sharma in ICC T20 Women Ranking List 2025 
விளையாட்டு

Deepti Sharma: ICC டி20 மகளிர் தரவரிசை : 2ம் இடத்தில் தீப்தி சர்மா

Deepti Sharma in ICC T20 Ranking List 2025 : டி20 வீராங்கனைகளுக்கான பவுலர்கள் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் தீப்தி சர்மா 2வது இடத்தை பிடித்துள்ளார்.

Kannan

ஐசிசி தரவரிசை பட்டியல் :

Deepti Sharma in ICC T20 Ranking List 2025 : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) சார்பில் 'டி-20' வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது.

தீப்தி சர்மா ’நம்பர் 2’ :

பவுலர்கள் வரிசையில் 732 புள்ளியுடன் இந்திய 'சுழல்' வீராங்கனை தீப்தி சர்மா 27, இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார்(Deepti Sharma ICC Ranking 2025). இங்கிலாந்துக்கு எதிரான 'டி-20' தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் இந்த முன்னேற்றம் கிடைத்தது.

ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஹெய்லி மேத்யூஸ்(Hayley Matthews) நம்பர்1 இடத்தில் தொடருகிறார். இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக அயர்லாந்து வீராங்கனை ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் 3 இடங்கள் முன்னேறி 6வது இடத்தில் உள்ளார். இந்தியாவின் தீப்தி சர்மா 3வது இடத்தில் இருக்கிறார்.

முதலிடத்தில் அனாபெல் :

'நம்பர்-1' பவுலராக உள்ள ஆஸ்திரேலியாவின் அனாபெல்லை (736) விட, தீப்தி 4 புள்ளி மட்டும் குறைவாக பெற்றுள்ளார். ஆல் ரவுண்டர் வரிசையில் தீப்தி (387) தொடர்ந்து 3வது இடத்தில் நீடிக்கிறார். முதல் இரு இடங்களில் வெஸ்ட் இண்டீசின் ஹேலே (505), நியூசிலாந்தின் அமேலியா கெர் (434) உள்ளனர்.

மேலும் படிக்க : ICC Rank : ஐசிசி பேட்ஸ்மேன்கள் தரவரிசை : ஜோ ரூட் மீண்டும் முதலிடம்

ஸ்மிருதி மந்தனா 3வது இடம் :

பேட்டர்கள் வரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா (728) மூன்றாவது இடத்தில் உள்ளார். முதல் இரு இடத்தில் பெத் மூனே (794, ஆஸி.,), ஹேலே (774, வெ.இண்டீஸ்) உள்ளனர். மற்ற இந்திய வீராங்கனைகள் ஷைபாலி 655 புள்ளிகளுடன் 9வது இடத்திலும், ஜெமிமா 625 புள்ளிகளுடன் 14வது இடத்திலும், ஹர்மன்பிரீத் கவுர் 613 புள்ளிகளுடன் 16 இடத்தில் இருக்கிறார்கள்.

=---