Indian cricketer Rishabh Pant set world record by hitting 100 sixes in Test cricket fastest time AI generated
விளையாட்டு

”ரிஷப் பண்ட் உலக சாதனை” : டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகவேக 100 சிக்சர்கள் : 89 இன்னிங்சில் எட்டி அசத்தல்..!

இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதி விரைவில் 100 சிக்சர்கள் அடித்து, உலக சாதனை படைத்து இருக்கிறார்.

Kannan

ரிஷப் பண்ட்

இலங்கை காலே நகரில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் அவர் இந்த சாதனையை எட்டினார். 4ம் நாளான இன்று இந்திய அணியின் அதிரடி பேட்டரும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவிரைவில் 100 சிக்சர்களை விளாசி உலக சாதனை புரிந்தார்.

89 இன்னிங்சில் அசத்தல்

89 இன்னிங்ஸ்களில் 100 சிக்சர்களை விளாசிய ரிஷப் பண்ட் டெஸ்ட்டில் அதிவிரைவு 100 சிக்சர்கள் உலக சாதனை என்பது இந்த வடிவத்தின் வரலாற்றில் இவ்வளவு விரைவாக வேறு யாரும் எட்டியதில்லை. ஏனென்றால், இது போன்ற ஷாட்களை ஆடுபவர் ஒரே நபர் ரிஷப் பண்ட் மட்டும்தான்.

100வது சிக்சர்

லாஹிரு குமாரா வீசிய பந்தை, லாவகமாக அடித்த ரிஷப், சிக்சர் அடித்தார். பவுண்டரியை தாண்டிய பந்து காணாமல் போனது. அதுதான் அவரது 100வது சிக்ஸ்!! இதுவே இந்த இன்னிங்சில் அவரது அரைசதம் நிறைவு செய்யும் ஷாட் ஆகவும் இருந்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை அடித்த வீரர்கள்

ரிஷப் பண்ட் 100 சிக்சர்கள் - 89 இன்னிங்ஸ்கள்.

பென் ஸ்டோக்ஸ் 138 சிக்சர்கள் - 220 இன்னிங்ஸ்கள்

பிரெண்டன் மெக்கல்லம் 107 சிக்சர்கள் - 176 இன்னிங்ஸ்கள்

ஆடம் கில்கிறிஸ்ட் - 100 சிக்சர்கள் - 137 இன்னிங்ஸ்கள்

ஜானி பேர்ஸ்டோ - 100 சிக்சர்கள் 178 இன்னிங்ஸ்கள்.

கடினமான பிட்ச், கவனத்துடன் ரிஷப்

ரிஷப் பண்ட்டிற்கு தொடர்ந்து இலங்கை வேகப்பந்து வீச்சாளர்கள் ஷார்ட் பிட்ச் சோதனை கொடுத்தனர், அவர் மிக அழகாக அதை கையாண்டு, ஷார்ட் பிட்ச் உத்தியில் 100வது சிக்சரை அடித்தார்.

69 பந்துகளில் 66 ரன்களை கடினமான பிட்சில், அடித்த அவர், 8 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் விளாசினார்.

ஏற்கெனவே குமாரா ஒரு பந்தை சிக்சருக்கு தட்டி விட்ட ரிஷப், அவரது இன்னொரு பந்தில் தான் 100 சிக்சர்கள் சாதனையை எட்டினார். இதனால் கடுப்பில் இருந்த குமாரா, ரிஷப்பின் விக்கெட்டை வீழ்த்திய போது, கொஞ்சம் ஓவராகவே கொண்டாடி தீர்த்தார்.

==============