Indian player Deepti Sharma has set a world record by claiming 350 wickets in international cricket google
விளையாட்டு

தீப்தி சர்மா உலக சாதனை! : சர்வதேச அரங்கில் 350 விக்கெட்டுகள் : பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அசத்தல்...

சர்வதேச அளவில் 350 விக்கெட்டுகளை சாய்த்து உலக சாதனை படைத்து இருக்கிறார், இந்திய வீராங்கனை தீப்தி சர்மா.

Kannan

மகளிர் டி20 உலகக்கோப்பை

இந்திய மகளிர் அணியில் முக்கியமான வீராங்கனைகளில் ஒருவர் தீப்தி சர்மா. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானை 64 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இந்திய மகளிர் அணி.

5 விக்கெட்டுகளை சாய்த்த தீப்தி சர்மா

தன்னுடைய அபாரமான பந்துவீச்சு மூலம் 5 விக்கெட்டுகளை சாய்த்த தீப்தி சர்மாவால் 17 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது பாகிஸ்தான்.

4 ஓவரில் வெறும் 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்த தீப்தி சர்மா, டி20 உலகக்கோப்பை வரலாற்றில் சிறந்த பந்துவீச்சை பதிவுசெய்தார்.

சர்வதேச கிரிக்கெட் - 350 விக்கெட்டுகள்

சர்வதேச கிரிக்கெட்டில் 350 விக்கெட்டுகளை கடந்து மாபெரும் மைல்கல்லை எட்டினார் தீப்தி சர்மா. கோஸ்வாமிக்கு பிறகு 350 விக்கெட்டுகளை கடந்த 2வது இந்திய வீராங்கனை தீப்தி சர்மா என்பது குறிப்பிடத்தக்கது.

டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள்

பாகிஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனையாக உலக சாதனை படைத்தார் தீப்தி சர்மா.

டி20 கிரிக்கெட் 165 விக்கெட்டுகளுடன் இருந்த தாய்லாந்து வீரர் திபாச்சா புத்தவோங்கை பின்னுக்கு தள்ளினார் தீப்தி சர்மா.

======