Indian players celebrate by refusing the trophy from the Pakistani minister - Isn't this victory? 
விளையாட்டு

கோப்பையை மறுத்து கொண்டாட்டத்தில் இந்திய வீரர்கள்- இதல்லவா வெற்றி!

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பை இல்லா மாபெரும் கொண்டாடத்தில் ஈடுபட்டது.

Bala Murugan

பாகிஸ்தான் புள்ளி விவரம்

Indian players celebrate by refusing the trophy from the Pakistani minister - Isn't this victory? : துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 146 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்களும், வருண் சக்ரவர்த்தி, அக்சர், பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இந்தியாவின் மாபெரும் வெற்றி

பின்னர் , வெற்றி பெற 147 ரன்கள் தேவை என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் அபிஷேக் சர்மா 5 ரன்களிலும் ஷுப்மன் கில் 12 ரன்களுடனும் வெளியேறினார். கேப்டன் சூர்யகுமார் ஒரே ரன்னில் ஆட்டமிழந்தார். இதில் துவண்ட இந்திய அணியை தூக்கி நிறுத்தும் விதமாக, அதிரடியாக விளையாடிய திலக் வர்மா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 53 பந்துகளில் 69 ரன்கள் விளாசினார். இறுதியில் இந்திய அணி 19.5 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்து 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்தியாவின் ஹாட்ரிக் வெற்றி

இதன்மூலம் 9வது முறையாக ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்த தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கோப்பையை வெறுத்து கொண்டாட்டத்தில் இந்தியா

வெற்றி பெற்றதை அடுத்து, கோப்பை வாங்க மேடைக்கு அழைக்கப்பட்ட இந்திய அணி போட்டி முடிந்ததும் ஒரு மணி நேரத்திற்கு பிறகு கோப்பை பெறும் மேடையை ஏறினர். பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோஷின் நக்வி கையால் ஆசியக் கோப்பையை வாங்க இந்திய அணி வீரர்கள் மறுத்தனர். தொடர்ந்து கோப்பை, பதக்கம் இல்லாமல் இந்திய அணியினர் வெறுங்கையில் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொண்டாட்டத்தில் இந்திய மக்கள்

இதனிடையே சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு 21 கோடி பரிசு வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார். இந்திய அணி நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளதகாவும் அவர் கூறியதைஅடுத்து, இந்திய அணியின் இந்த மாபெரும் கொண்டாட்டத்தை இந்திய மக்கள் அனைவரும் தங்கள் இடங்களில் வெடி வைத்தும், இனிப்புகள் வழங்கியும் வாழ்த்துகளை தெரிவித்தும் கொண்டாடத்தில் ஈடுபட்டனர்.

======