இந்திய அணி சாம்பியன்
PM Narendra Modi Meet India Women Cricket Team : மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி, இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணி முதன்முறையாக கோப்பையை வென்று வரலாறு படைத்தது. இந்திய அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ 51 கொடியை பரிசாக அறிவித்து வாழ்த்தி இருக்கிறது.
மோடியுடன் மகளிர் கிரிக்கெட் அணி
இந்நிலையில்,உலகக் கோப்பையுடன் பிரதமர் நரேந்திர மோடியை இந்திய வீராங்கனைகள் சந்தித்தனர். டெல்லியில் இந்த சந்திப்பு நடைபெற்றது. தலைமை பயிற்சியாளர் அமோல் முஜும்தார், பிசிசிஐ தலைவர் மிதுன் மன்ஹாஸ் ஆகியோரும் இந்த சந்திப்பின் போது உடனிருந்தனர்.
பிரதமர் மோடியுடன் கலந்துரையாடல்
இறுதிப் போட்டி, விளையாடிய விதம் குறித்து பிரதமர் மோடியிடம் வீராங்கனைகள் கலந்துரையாடினர். ஹர்மன்பிரீத் மற்றும் அமன்ஜோத் கவுர் பிடித்த கேட்ச் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
நமோ ஜெர்ஸி பரிசு
இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடிக்கு ‘நமோ’ என பெயருடன் கூடிய இந்திய அணியின் ஜெர்ஸியை வீராங்கனைகள் வழங்கினர். அதில் அணியினர் அனைவரும் கையொப்பமிட்டு இருந்தனர். கோப்பையை வென்று நாட்டிற்கு பெருமை தேடித் தந்த மகளிர் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
============================