Indian women's team won the T20 series against Sri Lanka by 3.0 JioHotstar India Women vs Sri Lanka Women 3rd T20 Match Highlights
விளையாட்டு

இலங்கைக்கு எதிரான டி20 : தொடரை வென்று இந்திய மகளிர் அணி அசத்தல்

India Women vs Sri Lanka Women 3rd T20 Match Highlights : இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 3.0 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்திய மகளிர் அணி.

Kannan

இந்தியா - இலங்கை டி20 தொடர்

India Women vs Sri Lanka Women 3rd T20 : Shafali Verma’s superb 79, India to 3-0 series lead, win the series : இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் இரண்டு போட்டிகளை இந்தியா எளிதில் கைப்பற்றியது.

இந்திய அணி பீல்டிங்

மூன்றாவது போட்டி திருவனந்தபுரம், கிரீன்பீல்டு மைதானத்தில் நடந்தது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் அருந்ததி, ஸ்னே ராணாவுக்குப் பதில் தீப்தி சர்மா, ரேணுகா சேர்க்கப்பட்டனர்

இலங்கையை பந்தாடிய இந்தியா

இலங்கை அணிக்கு கேப்டன் சமாரி, ஹாசினி ஜோடி துவக்கம் கொடுத்தது. சமாரி 3 ரன் எடுத்து, தீப்தி பந்தில் வீழ்ந்தார். 18 பந்தில் 25 ரன் எடுத்த ஹாசினி, ரேணுகாவின்'வேகத்தில்' சரிந்தார். இதன் பின் இலங்கை வீராங்கனைகள் வருவதும் போவதுமாக இருந்தனர்.

ஹர்ஷித்தா (2), நிலாக்சிகா (2) நிலைக்கவில்லை. கவிஷா 20 ரன் எடுத்தார். இமேஷா (27) சற்று உதவினார். இலங்கை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 117 ரன்கள் மட்டும் எடுத்தது. இந்தியா சார்பில் ரேணுகா 4 விக்கெட்டுகளையும், தீப்தி 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

ஷைபாலி அபாரம்

118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஷைபாலி, ஸ்மிருதி ஜோடி வேகமான துவக்கம் தந்தது. ஸ்மிருதி (1) அவுட்டான போதும், ஷைபாலி, 24 பந்தில் அரைசதம் விளாசினார். ஜெமிமா 9 ரன்னில் திரும்பினார். கடைசியில் ஷைபாலி ஒரு சிக்சர் அடிக்க, இந்திய அணி 13.2 ஓவரில் வெற்றி இலக்கை எட்டி, 8 விக்கெட்டில் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா ஹாட்ரிக் வெற்றி

5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட்டில் இந்திய மகளிர் அணி ஹாட்ரிக் வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றி அசத்தியது. ஷைபாலி (79 ரன், 42 பந்து), ஹர்மன்பிரீத் கவுர் (21) அவுட்டாகாமல் இருந்தனர். நான்காவது போட்டி திருவனந்தபுரத்தில் நாளை நடக்க உள்ளது.

தீப்தி சர்மா - 333 விக்கெட்டுகள்

சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் மூன்று வித போட்டிகளில் அதிக விக்கெட் சாய்த்த பவுலர்களில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் இந்தியாவின் தீப்தி சர்மா.

இவர், டெஸ்டில் 20 (5 போட்டி), ஒருநாள் அரங்கில் 162 (121 போட்டிகள்), 'டி-20'ல் 151 (131போட்டிகள்) என மொத்தம் 333 விக்கெட் சாய்த்துள்ளார். முதலிடத்தை ஜுலன் கோஸ்வாமி (335), இங்கிலாந்தின் கேத்தரின் ஷிவர் பிரன்ட் (335) பகிர்ந்து கொண்டுள்ளனர். எல்லிஸ் பெர்ரி (331, ஆஸி.,) 3வதாக உள்ளார்.

===