IPL match against Kolkata, Lucknow player Mukul Choudhary made everyone look back by raining sixes google
விளையாட்டு

தோனி ஸ்டைலில் ஹெலிகாப்டர் ஷாட்ஸ் : மைதானத்தில் சிக்சர் மழை : முகுல் சவுத்ரி, லக்னோ அணியின் நம்பிக்கை நாயகன்!

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், லக்னோ வீரர் முகுல் சவுத்ரி, சிக்சர் மழை பொழிந்து, அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

Kannan

கொல்கத்தா vs லக்னோ

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடியது. முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 181 ரன்கள் எடுத்தது.

ஆட்டம் கண்ட லக்னோ

182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற வலுவான இலக்கை நோக்கி லக்னோ அணி விளையாடியது. டாப் ஆர்டர் வீரர்கள் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. தொடர்ச்சியாக விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், ஆயுஷ் பதோனி மட்டும் நிலைத்து விளையாடி 54 ரன்கள் எடுத்தார்.

வெற்றியை நோக்கி கொல்கத்தா?

பின்னர் மளமளவென விக்கெட்கள் சரிந்த நிலையில், கிட்டத்தட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றி உறுதியானது. மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்கள் கொண்டாட்டங்களை தொடங்கினர்.

முகுல் சவுத்ரியின் சிக்சர்கள்

அப்போது தான் அந்த அதிசயம் நிகழத் தொடங்கியது. அணியை முகுல் சௌத்ரி சரிவில் இருந்து மீட்டார். மறுமுனையில் பவுலர் ஆவேஷ் கானை வைத்துகொண்டு முகுல் சௌத்ரி தனி ஆளாக சிக்சர் மழை பொழிந்தார்.

தோனி ஸ்டைலில் ஷாட்

அவர் அடித்த ஹெலிகாப்டர் ஸ்டைல் சிக்சர்கள் தோனியை நினைவுப்படுத்தியது. கடைசி 4 ஓவர்களில் 54 ரன்கள் தேவை என்ற நிலையில், அதனையும் சாத்தியப்படுத்தி அணியை வெற்றி பெற வைத்தார் முகுல் சவுத்ரி.

ராஜஸ்தானை சேர்ந்த முகுல் சவுத்ரி

21 வயதான ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த முகுல் சவுத்ரி, சத்தீஸ்கர் அணிக்கு எதிராக கடந்த ஜனவரி 2023ஆம் ஆண்டு தனது முதல் தர கிரிக்கெட் போட்டியில் களமிறங்கினார். அப்போது 4 போட்டிகளில் 103 ரன்கள் எடுத்தார்.

டி20ல் ரன் குவிப்பு

பின்னர் அதே வருடம் டி20 போட்டிகளில் விளையாட தொடங்கிய சௌத்ரி, ஜார்க்கண்ட் அணிக்கு எதிராக களமிறங்கினார். இதுவரை 7 முதல் தர டி20 கிரிக்கெட் போட்டிகளில் 37.66 சராசரியுடன் 226 ரன்கள் குவித்துள்ளார்.

சையத் முஸ்தாக் அலி கோப்பை தொடரில் 198.95 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 173 ரன்கள் குவித்தார். இதனைத்தொடர்ந்து ஐபிஎல் அணிகளால் அடையாளம் காணப்பட்டு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் இந்த சீசனில் 2.6 கோடிக்கு வாங்கப்பட்டார்.

கிரிக்கெட் உலகில் பேசுபொருளாகியுள்ள முகுல் சௌத்ரி, ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து வரும் போட்டிகளில் முக்கிய வீரராக இருப்பார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

==============