knockout stage of the FIFA World Cup, Brazil defeated Japan to advance to the next round, Germany lost to Paraguay AI generated
விளையாட்டு

FIFA WC 2026 : ”ஜெர்மனிக்கு அதிர்ச்சி தந்த பராகுவே : ஜப்பானை வீழ்த்திய பிரேசில் : நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள்...!

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நாக்-அவுட் ஆட்டங்களில், பிரேசில் ஜப்பானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய நிலையில், ஜெர்மனி பராகுவேயிடம் தோல்வியடைந்தது.

Kannan

உலகக்கோப்பை கால்பந்து தொடர்

உலகக்கோப்பை கால்பந்து போட்டி விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஜெர்மனி - பராகுவே மோதல்

ஜெர்மனி மற்றும் பராகுவே அணிகளுக்கிடையேயான ஆட்டம் 120 நிமிடங்களின் முடிவில் 1-1 என சமநிலையில் முடிந்ததால் பெனால்டி ஷூட் அவுட்டிற்கு ஆட்டம் சென்றது. இது உண்மையில் கத்தி முனைதான். எவ்வளவு பெரிய அணியும் இதில் காலியாகும். அப்படித்தான் ஜெர்மனியும் பாதிப்பை சந்தித்தது.

முதல் பாதியில் பராகுவே முன்னிலை

முதல் பாதியின் இறுதியில், ஜூலியோ என்சிசோவின் முயற்சியால் கிடைத்த கார்னரில், மாதியாஸ் கலார்சா அளித்த துல்லியமான கிராஸை ஹெட்டராக மாற்றிய என்சிசோ கோல் அடித்து, 42-வது நிமிடத்தில் பராகுவேவை முன்னிலை பெறச் செய்தார்.

2வது பாதியில் ஜெர்மனி கோல்

இரண்டாம் பாதியில் தீவிரமாக களமிறங்கிய ஜெர்மனி, 54வது நிமிடத்தில் ஃப்ளோரியன் விர்ட்ஸ் அளித்த கிராஸை கை ஹாவெர்ட்ஸ் அழகான ஹெட்டர் மூலம் கோலாக்கி சமநிலையை ஏற்படுத்தினார்.

அதன்பின் இரு அணிகளும் வெற்றிக்காக போராடின. கூடுதல் நேரத்தின் இறுதியில் ஜோனதன் தாஹ் அடித்த கோல் விஏஆர் பரிசோதனைக்குப் பிறகு நிராகரிக்கப்பட்டது.

பெனால்டி ஷூட் வாய்ப்பு

பெனால்டி ஷூட் அவுட்டில் பராகுவே கோல்கீப்பர் ஆர்லாண்டோ கில் அபாரமாக செயல்பட்டார். கை ஹாவெர்ட்ஸ் மற்றும் நிக் வோல்டமேடே எடுத்த பெனால்டிகளை அவர் தடுத்தார். மேலும் ஜோனதன் தாஹ் தனது முயற்சியை வானுக்கு பறக்கவிட்டார்.

இறுதியில் ஜோசே கனாலே தனது பெனால்டியை வெற்றிகரமாக மாற்றி, பராகுவேவுக்கு 4-3 என்ற ஷூட் அவுட் வெற்றியை உறுதி செய்தார்.

இந்த வெற்றியுடன் பராகுவே, ரவுண்ட் ஆஃப் 16-ல் பிரான்ஸ் - ஸ்வீடன் ஆட்டத்தில் வெல்லும் அணியை எதிர்கொள்ள தயாராக உள்ளது.

பிரேசில்- ஜப்பான்

ஐந்து முறை உலக சாம்பியனான பிரேசில், ஜப்பானுக்கு எதிராக கடுமையாக போராடி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

அதிர்ச்சி அளித்த ஜப்பான்

29-வது நிமிடத்தில் பிரேசிலின் தவறான பாஸை படார் எனத் திரும்பி இடையூறு செய்து பந்தைப் பெற்ற ஜப்பான் மின்னல் வீரர் கைஷு சானோ, மத்திய ப்பகுதியில் வேகமாக முன்னேறி காசெமிரோவை பின்னுக்குத் தள்ளினார்.

பின்னர் பாக்சிற்கு வெகுவெளியே இருந்து அடித்த சக்திவாய்ந்த ஷாட் கோலாக மாறி, ஜப்பானை முன்னிலைப் படுத்த பிரேசில் அதிர்ச்சியடைந்தது.

சுதாரித்த பிரேசில் - வெற்றி

தோல்வியைச் சந்திக்கும் அபாயத்தை பிரேசிலுக்கு உருவாக்கியது. ஆனால், இரண்டாம் பாதியில் பிரேசில் முற்றிலும் மாறுபட்ட அணியாக களமிறங்கியது.

காயமடைந்த மாதியஸ் குன்யாவுக்கு பதிலாக இளம் நட்சத்திரம் என்ட்ரிக் களமிறங்கியதும் தாக்குதல் ஆட்டம் வேகமெடுத்தது.

56-வது நிமிடத்தில் காப்ரியல் மகலய்ஸ் அளித்த சிறப்பான கிராஸை காசெமிரோ துல்லியமான ஹெட்டராக மாற்றி சமநிலையை ஏற்படுத்தினார்.

அதன்பின் பிரேசில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தது. வினிசியஸ் ஜூனியர் பாய்ந்தோடி அடித்த ஷாட்டை கோல்கீப்பர் சியோன் சுசுகி அற்புதமாக தடுத்து கம்பத்தில் மோதி வெளியேறச் செய்தார்.

==================