உலகக்கோப்பை கால்பந்து ’ரவுண்ட் 32’
மூன்று நாடுகளில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள், ’ரவுண்ட் 32’ எனப்படும் நாக் அவுட் சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
பிரான்ஸ் - ஸ்வீடன் மோதல்
நியூயார்க்கில் நடைபெற்ற போட்டியில் பிரான்ஸ், சுவீடன் அணிகள் மோதின. இரு அணிகளும் ஆரம்பம் முதல் கோல் அடிக்கும் முயற்சியில் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின. முதல் பாதியில் கோல் அடிக்கவி முடியவில்லை.
கிளியன் எம்பாப்பே முதல் கோல்
இரண்டாம் பாதி தொடங்கியவுடன் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிளியன் எம்பாப்பே, டெம்பெலே உதவியுடன் முதல் கோல் அடித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்க சுவீடன் அணி மேற்கொண்ட முயற்சிகள் வீணாகின.
எம்பாப்பே சாதனை
தொடர்ந்து 53வது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் பிராட்லி பார்கொலா கோல் போஸ்டின் இடது பக்கத்தில் அடித்து 2வது கோலை பதிவு செய்தார்.
பின்னர் 74வது நிமிடத்தில் எம்பாப்பே மீண்டும் கோல் அடித்து அசத்தினார்.
இதன்மூலம் பிரானாஸ் அணி 3-0 என்ற கோல்கணக்கில் எளிதாக வென்று ’ரவுண்ட் 16’ சுற்றுக்கு தகுதி பெற்றது. இப்போட்டியில் 2 கோல்கள் அடித்த எம்பாப்பே பல்வேறு சாதனைகளை படைத்தார்.
எம்பாப்பே 18 கோல்கள்
உலகக் கோப்பை தொடரில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 18 கோல்களுடன் க்ளோஸ் என்பவரை பின்னுக்கு தள்ளி 2வது இடம் பிடித்தார்.
முதலிடத்தில் மெஸ்ஸி
முதலிடத்தில் அர்ஜெண்டினா நட்சத்திர வீரர் மெஸ்ஸி 19 கோல்களுடன் இடம் பிடித்துள்ளார்.
எம்பாப்பே அசத்தலான ஆட்டம்
2018ல் தனது முதல் உலகக் கோப்பை விளையாடிய எம்பாப்பே, 4 கோல்கள் அடித்தார். அதனைத்தொடர்ந்து 2022 உலகக் கோப்பையில், எம்பாப்பே இறுதிப் போட்டியில் அடித்த ஹாட்ரிக் கோல்கள் சேர்த்து, 8 கோல்கள் அடித்தார்.
இந்த தொடரில் இதுவரை மட்டுமே 6 கோல்கள் அடித்துள்ளார். மேலும் உலகக் கோப்பை நாக் அவுட் சுற்று போட்டிகளில் 10 கோல்கள் அடித்து முன்னாள் பிரேசில் நட்சத்திர வீரர் ரொனால்டோ சாதனையை முறியடித்துள்ளார்.
ஹாலண்ட் அபாரம்
டெல்லாஸ் மைதானத்தில் நடைபெற்ற மற்றொரு ரவுண்ட் 32 சுற்று போட்டியில், ஐவரி கோஸ்ட், நார்வே அணிகள் மோதின. கடந்த போட்டியில் அதிக மாற்றங்களை செய்த நார்வே அணி இந்த போட்டியிலும் 10க்கும் மேற்பட்ட மாற்றங்களை செய்தது.
போட்டி தொடங்கி 39வது நிமிடத்தில் நார்வே அணியின் நுசா முதல் கோலை அடித்தார்.
74வது நிமிடத்தில் அமட் டியாலோ கோல் அடித்து சமன் செய்தார். பின்னர் 86வது நிமிடத்தில் நார்வே நட்சத்திர வீரர் ஹாலண்ட் 2வது கோல் அடித்தார்.
நார்வே அணி வெற்றி
இதன்மூலம் நார்வே அணி 2-1 என்ற கோல்கணக்கில் வென்று ரவுண்ட் 16 சுற்றுக்கு தகுதி பெற்றது. உலகக் கோப்பை தொடரில் ஹாலண்ட் தனது 5வது கோலை பதிவு செய்தார்.
=================