Lionel Messi has secured the world record for scoring 19 goals in the World Cup google
விளையாட்டு

Lionel Messi : ”உலகக்கோப்பையில் 19 கோல்கள், 7 போட்டிகளில் தொடர்ச்சியாக கோல்” : புதிய சாதனை படைத்த லியோனல் மெஸ்ஸி...!

உலகக்கோப்பையில் 19 கோல்களை அடித்த வீரர் என்ற உலக சாதனையை வசப்படுத்தி இருக்கிறார், லியோனல் மெஸ்ஸி.

Kannan

அர்ஜென்டினா - ஜோர்டான் மோதல்

மூன்று நாடுகளில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடர், நாளுக்குநாள் விறுவிறுப்படைந்து வருகிறது. அமெரிக்காவில் ஆர்​லிங்​டனில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜோர்டன் - அர்ஜென்டினா அணிகள் மோதின.

மாற்று ஆட்டக்காரர் மெஸ்ஸி

ஏற்​கெனவே நாக்​-அவுட் சுற்​றுக்கு அர்ஜென்டினா முன்​னேறி விட்​ட​தால், அணி​யில் 9 மாற்​றங்​களை பயிற்​சி​யாளர் செய்​திருந்​தார். நட்​சத்​திர வீரர் லயோனல் மெஸ்ஸி மாற்று ஆட்​டக்​கார​ராக களமிறக்​கப்​பட்​டார்.

ஆக்ரோஷமாக விளையாடிய அர்ஜென்டீனா

அர்​ஜென்​டினா அணி ஆரம்​பம் முதலே ஆக்ரோஷமாக விளை​யாடியது. 19-வது நிமிடத்​தில் கியோவனி லோ செல்ஸோ ஒரு கோலடித்து அணிக்கு முன்​னிலை பெற்று தந்​தார்.

பாக்ஸ் பகு​தி​யில் 20 அடி தூரத்​தில் இருந்து அவர் அடித்த ஃபிரீ கிக்​கை, ஜோர்​டான் கோல்​கீப்​பர் யாசித் அபுலைலா​வால் தடுக்க முடிய​வில்​லை. கோல்​கம்​பத்​தின் வலது பக்​கத்தை அந்த பந்து துளைத்​தது.

2-0 அர்ஜன்டினா முன்னிலை

அர்ஜென்டினா தொடர்ந்து பந்தை தங்​கள் கட்​டுப்​பாட்​டில் வைத்​திருந்​ததுடன், 31வது நிமிடத்​தில் மேலும் ஒரு கோலை அடித்​தது. இந்த கோலை அர்​ஜெண்​டினா வீரர் லவுடேரா மார்ட்​டினஸ் செலுத்தி அணி வீரர்​களை உற்​சாகத்​துக்கு உள்​ளாக்​கி​னார்.

இதனால் முதல் பாதி வரை 2-0 என்ற கணக்​கில் அர்ஜெண்டினா முன்​னிலை​யில் இருந்​தது.

ஒரு கோல் அடித்த ஜோர்டான்

2-வது பாதி​யின்​போது ஆக்​ரோஷ​மாக விளை​யாடிய ஜோர்​டான் 55வது நிமிடத்​தில் ஒரு கோலடித்​தது. அந்த அணி​யின் முசா அல்​-​தா​மாரி இந்த கோலை அடித்​தார்.

கோல் அடித்த மெஸ்ஸி

60வது நிமிடத்​தில் ரசிகர்​களின் ஏகோபித்த வரவேற்​புக்கு இடையே லியோனல் மெஸ்ஸி களமிறக்​கப்​பட்​டார். 80வது நிமிடத்​தில் கிடைத்த ஃபிரீ கிக் மூலம் அற்​புத​மான கோலை அடித்து ரசிகர்​களை மகிழ்ச்​சிக்​குள்​ளாக்​கி​னார் மெஸ்​ஸி.

அர்ஜென்டினா ஹாட்ரிக் வெற்றி

இதனால் அர்​ஜென்டினா 3-1 என்ற கணக்​கில் முன்​னிலை பெற்​று, இறுதியில் வெற்றி பெற்றது. லீக் சுற்​றில் ஹாட்​ரிக் வெற்றியை சுவைத்​ததுடன் ஜே பிரி​வில் முதலிடம் பிடித்​தது. வெற்​றியே பெறாத ஜோர்​டன் சுற்​றி​லிருந்து வெளி​யேறியது.

7 போட்​டிகளில் கோல், மெஸ்ஸி சாதனை

உலகக் கோப்பை போட்​டிகளில் தொடர்ந்து 7 ஆட்​டங்​களில் கோலடித்து சாதனை புரிந்​துள்​ளார் லியோனல் மெஸ்​ஸி. ஜோர்​டான் அணிக்​கெ​தி​ரான போட்​டி​யில் அவர் கோலடித்​ததன் மூலம் இந்த சாதனையை அவர் எட்​டி​னார்.

சாதனைகளை முறியடித்த மெஸ்ஸி

இதற்கு முன்பு பிரான்​ஸின் ஜஸ்ட் ஃபோன்​டைன் (1958), பிரேசிலின் ஜெய்ர்​சின்ஹோ (1970) ஆகியோர் தொடர்ந்து 6 உலகக் கோப்பை போட்​டிகளில் கோலடித்து சாதனை செய்திருந்தனர். அந்த சாதனையை தற்​போது மெஸ்ஸி முறியடித்துள்​ளார்.

உலகக்கோப்பையில் 19 கோல்கள்

உலகக்கோப்பை வரலாற்​றில் அதிக கோல்​கள் அடித்த வீரர்​கள் வரிசை​யில் அவர் தொடர்ந்து முதலிடத்​தில் இருக்​கிறார். நேற்​றைய போட்​டி​யில் அடித்​த கோலுடன்​ எண்​ணிக்​கை 19 ஆக உயர்​ந்​துள்​ளது.

இன்னும் காலிறுதி, அரையிறுதி, இறுதி ஆட்டங்களும் இருப்பதால், மெஸ்ஸியின் கோல் மழை தொடரும் என்ற ஆர்வத்துடன் ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

===========================