கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி
Lionel Messi Jersey Gift To PM Narendra Modi 75th Birthday : அர்ஜென்டினாவை சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி. கால்பந்து உலகின் ஜாம்பவானாக கருதப்படும் இவருக்கு உலகம் முழுவதும் கோடிக் கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
டிசம்பரில் இந்தியா வருகிறார்
இந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி இந்தியா வரும் மெஸ்ஸி மூன்று நாட்கள் பயணம் மேற்கொள்கிறார்(Lionel Messi Visit India). டெல்லி, கொல்கத்தா, மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார். டெல்லி நிகழ்ச்சியின் போது பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் பரிசு
இந்தநிலையில், பிரதமர் மோடி தனது 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்(PM Narendra Modi 75th Birthday). இதனை முன்னிட்டு, லியோனல் மெஸ்ஸி அவருக்கு தனது ஜெர்ஸியை கையொப்பமிட்டு(Lionel Messi Gift), பிறந்தநாள் பரிசாக அனுப்பி இருக்கிறார்.
ஜெர்ஸியை பரிசாக வழங்கினார்
2022ம் ஆண்டு FIFA உலகக் கோப்பையின் போது இந்த ஜெர்ஸியை மெஸ்ஸி அணிந்து தான் விளையாடினார். அந்த ஆண்டு உலகக் கோப்பை அர்ஜென்டீனா வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஜெர்ஸி உலக அளவில் பிரபலமாக கருதப்படுகிறது.
14 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வருகிறார்
2011ம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற வெனிசுலாவுக்கு எதிரான கால்பந்து போட்டியில் பங்கேற்க இந்தியா வந்திருந்தார் மெஸ்ஸி. அதன்பிறகு 14 ஆண்டுகள் கழித்து அவர் இந்தியா வருகிறார். மெஸ்ஸியின் இந்த இந்திய சுற்றுப்பயணத்திற்கு 'GOAT Tour of India 2025' என பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
====