massive prize money awarded to the teams that participated in the Football World Cup tournament google
விளையாட்டு

FIFA World cup : ”ஸ்பெயின் ரூ. 480 கோடி” : அர்ஜென்டினாவுக்கு 318 கோடி, 3ம் இடம்பிடித்த பிரான்சுக்கு 279 கோடி பரிசு...!

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்ற அணிகளுக்கு வழங்கப்பட்டு மெகா பரிசுத்தொகை எவ்வளவு என்ற விவரங்களை பார்க்கலாம்.

Kannan

உலகக் கோப்பை கால்பந்து போட்டி

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி கோலாகலமாக நிறைவடைந்தது. இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி கோப்பையை தட்டிச்சென்றது.

39 நாட்கள் திருவிழா

உலகப் புகழ்பெற்ற ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி ஆட்டம் பாட்டத்துடன் முடிவடைந்தது. ஜூன் 11ம் தேதி தொடங்கி நேற்று ஜூலை 19ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த 39 நாட்களுக்கும் கால்பந்து ரசிகர்களுக்கு ஒரே திருவிழா தான்.

கோப்பையை வென்ற ஸ்பெயின்

ரொனால்டோ அணி வெளியேறியது பலருக்கும் வருத்தம் தான். மெஸ்ஸி டீம் பைனலுக்கு சென்றது பலருக்கு மகிழ்ச்சி.

இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் கோப்பையை வென்றது. ஸ்பெயின் ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்தநிலையில், பரிசுத்தொகை விவரங்களை பார்ப்போம்.

ஸ்பெயின் - 481 கொடி பரிசு

சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணிக்கு 50 மில்லியன் டாலர் அதாவது 481.7 கோடி ரூபாய் பரிசு தொகையாக கொடுக்கப்பட்டது.

அர்ஜென்டினா - 318 கோடி பரிசு

இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியிடம் தோற்ற அர்ஜென்டினா அணிக்கு 33 மில்லியன் டாலர் அதாவது 318 கோடி ரூபாய் பரிசு தொகையாக வழங்கப்பட்டது.

பிரான்ஸ் அணிக்கு 279 கோடி பரிசு

மூன்றாம் இடத்தை பிடித்த பிரான்ஸ் அணிக்கு 29 மில்லியன் டாலர் அதாவது 279.4 கோடி ரூபாய் பரிசு தொகையாக கொடுக்கப்பட்டது.

இங்கிலாந்து 260 கோடி

நான்காம் இடம் பிடித்த இங்கிலாந்து அணிக்கு 27 மில்லியன் டாலர் அதாவது 260.1 கோடி ரூபாய் பரிசு.

இவர்களை தொடர்ந்து 5-8ம் இடத்தை பிடித்த அணிகளுக்கு ரூ.183 கோடியும், 9-16ம் இடத்தை பிடித்த அணிகளுக்கு ரூ.144.5 கோடியும்,

17-32ம் இடத்தை பிடித்த அணிகளுக்கு ரூ.106 கோடியும் மற்றும் 33-48ம் இடத்தை பிடித்த அணிகளுக்கு ரூ.86.7 கோடியும் கொடுக்கப்பட்டது.

அடுத்த ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் 2030ல் நடைபெறும்.

==================