MS Dhoni Farewell Drone Show Chepauk Chennai CSK source: Chennai Super Kings
விளையாட்டு

சேப்பாக்கம் வானில் ஒளிர்ந்த 'Thala Forever': எம்.எஸ்.தோனிக்கு பிரியாவிடை அளிக்கும் விதமாக பிரம்மாண்ட டிரோன் ஷோ!

அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்ற எம்.எஸ். தோனிக்கு பிரியாவிடை அளிக்கும் விதமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்தப்பட்ட பிரம்மாண்ட டிரோன் ஷோ ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Kavitha prasanna

MS Dhoni Farewell Drone Show Chepauk Chennai CSK

அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி, அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் நேற்று (நவம்பர் 17) ஓய்வு பெற்றார்.

கடந்த 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் அறிமுகமான போதிலிருந்து சென்னை அணிக்காக விளையாடி வந்த தோனி, சிஎஸ்கே அணிக்கு 5 ஐபிஎல் கோப்பைகளையும், 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளையும் பெற்றுக் கொடுத்துள்ளார்.

ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தாலும், அடுத்த ஐபிஎல்-2027 சீசனில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகராக ( Team Mentor) செயல்பட உள்ளார்.

சேப்பாக்கம் மைதானத்தில் பிரம்மாண்ட டிரோன் ஷோ

இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் திடலில் எம்.எஸ். தோனிக்குப் பிரியாவிடை அளிக்கும் விதமாகவும், அவரைக் கௌரவிக்கும் விதமாகவும் நூற்றுக்கும் மேற்பட்ட டிரோன்கள் மூலம் பிரம்மாண்ட டிரோன் ஷோ நடத்தப்பட்டது.

வானில் ஒளிரவிடப்பட்ட இந்தக் காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன. அதன் சிறப்பம்சங்கள்....

தோனியின் உருவப்படம் மற்றும் ஷாட்கள்

நூற்றுக்கணக்கான டிரோன்கள் மூலம் வானில் தோனியின் முகம், அவரது புகழ்பெற்ற ஹெலிகாப்டர் ஷாட் மற்றும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்யும் காட்சிகள் தத்ரூபமாக ஒளிரவிடப்பட்டன.

'Thala Forever' வாசகம்

மேலும், 'தல' என்ற பெயரும், அவரது அடையாளமான ஜெர்சி எண் '7'-ம் வானில் காட்சிப்படுத்தப்பட்டன. குறிப்பாக, 'Thala Forever' என்ற வாசகம் வானில் ஒளிர்ந்த தருணம் ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

===========