Namibia Defeat South Africa in T20 First Match 2025 Highlights in Tamil 
விளையாட்டு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதல் வெற்றி! நமீபியா அசத்தல்!

Namibia Defeat South Africa in T20 First Match 2025 : தென்னாப்பிரிக்கா மற்றும் நமீபியா இருவருக்கும் நடைபெற்ற போட்டியில் குறைந்த அனுபவம் கொண்ட நமீபியாவிடம் தென்னாப்பிரிக்கா தோல்வியடைந்தது.

Bala Murugan

களமிறங்கிய தென்னாப்பிரிக்கா

Namibia Defeat South Africa in T20 First Match 2025 : அண்டை நாடுகளாக இருக்கும் தென்னாப்பிரிக்கா மற்றும் நமீபியா இடையிலான டி20 முதல் போட்டி நமீபியாவின் விண்டோக் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டோனோவன் பெரைரா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க வீரர்களாக லுவான் டி ப்ரெடோரியஸ், குவின்டன் டி காக் களம் இறங்கினர். டி காக் 1 ரன்னிலும், அடுத்து வந்த ரீசா ஹென்ரிக்ஸ் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தொடக்க வீரர் ப்ரெடோரியஸ் 22 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

ஆட்டமிழந்த வீரர்கள்

இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ஸ்மித் 31 ரன்களும், ஜோம் போர்டின் 19 ரன்களும் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்கா அணி 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.இதையடுத்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நமீபியா அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடத் தொடங்கினர். தொடக்க வீரர் லோரன் ஸ்டீன்காம்ப் 13 ரன்களும், ஜேன் ஃப்ரைலிங்க், ஜேன் நிகோல் தலா 7 ரன்களும் எடுத்தனர். கேப்டன் ஜெரார்ட் எராமஸ் பொறுமையாக விளையாடி 21 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

நமீபியாவின் வெற்றி பயணம்

ஸ்மித் 13ரன்களும், மலான் க்ரூகர் 18 ரன்களும் எடுத்தனர். விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும் ஜேன் க்ரீன் பொறுமையாக விளையாடி நமீபியா அணிக்கு நம்பிக்கை அளித்தார். 19 ஓவர்கள் முடிவில் அந்தஅணி 6 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஓவரில் 11 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தபோது முதல் பந்தை க்ரீன் சிக்சருக்கு அனுப்பினார். அடுத்தடுத்த பந்துகளில் 1,2,1 ரன்கள் எடுக்கப்பட்டன. கடைசி பந்தில் வெற்றிக்கு 1 ரன் தேவைப்பட்டபோது அதை பவுண்டரிக்கு அனுப்பி அணியை வெற்றிபெற வைத்தார் ஜேன் க்ரீன். கிரிக்கெட் ஜாம்பவன் அணிகள் கொண்ட நாடான தென்னாபிரிக்காவை எதிர்த்து, தனது வெற்றியை பதிவு செய்துள்ள நமீபியாவுக்கு, அந்நாட்டவர்கள் மற்றும் பிற நாட்டு கிரிக்கெட் பிரியர்கள் பலர் தங்களின் வாழத்துகளை தெரிவித்து வருகின்றனர்.