New jersey for Indian team to participate in next year's ICC Men's T20 World Cup 2025 BCCI
விளையாட்டு

டி 20 உலகக் கோப்பை 2026 : இந்திய அணிக்கு புதிய ஜெர்சி அறிமுகம்

New Jersey for Indian Team in ICC Men's T20 World Cup 2026 : அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க இருக்கும், இந்திய அணிக்கு புதிய ஜெர்ஸி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Kannan

10வது ஐசிசி டி.20

New Jersey for Indian Team in ICC Men's T20 World Cup 2026 : ஆண்களுக்கான 10-வது ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2026ம் ஆண்டு பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள 8 நகரங்களில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் இந்தியா ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான்

இதே பிரிவில் பாகிஸ்தான், அமெரிக்கா, நெதர்லாந்து, நமீபியா அணிகளும் உள்ளன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பிப்ரவரி 7-ல் அமெரிக்காவுடன் மோத உள்ளது. இந்நிலையில் இந்த டி 20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சி வெளியிடப்பட்டது.

இந்திய அணிக்கு நியூ ஜெர்ஸி

ராய்ப்பூரில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியின் போது இந்திய அணியின் ஜெர்சியை ரோஹித் சர்மா, திலக் வர்மா ஆகியோர் வெளியிட்டனர்.

இலச்சினைக்கு மேல் நட்சத்திரங்கள

ஜெர்சியில் இந்திய அணி இரண்டு டி20 உலகக் கோப்பைகளை வென்றதை நினைவுக்கூறும் வகையில் இந்திய இலச்சினைக்கு மேல் இரண்டு ஸ்டார்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இந்த புதிய ஜெர்சியானது நீலம், ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறங்களைக் கொண்டு கால்பந்து அணிகளின் ஜெர்சியைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரோஹித் சர்மா பெருமிதம்

ஜெர்சி அறிமுக நிகழ்ச்சியில் பேசிய இந்திய அணி வீரரும், டி20 உலகக் கோப்பை தொடரின் தூதருமான ரோஹித் சர்மா, "இது ஒரு நீண்ட பயணம். 2007 ஆம் ஆண்டு நாங்கள் முதல் உலகக் கோப்பையை வென்றோம், அடுத்த உலகக் கோப்பையை வெல்ல 15 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்க வேண்டியிருந்தது. மீண்டும் கோப்பையை வென்றது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த முறையும் சாதிப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்றார்.

டி.20 உலகக் கோப்பை - 20 அணிகள்

இந்த தொடரில், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், நேபாளம், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், இத்தாலி, கனடா, நபீமியா, நெதர்லாந்து, அமெரிக்கா, ஆஃப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய 20 அணிகள் பங்கேற்கின்றன

====