PM Narendra Modi Congrats Indian team has won Women's World Cup Kabaddi Championship 2025 Winner Google
விளையாட்டு

உலகக் கோப்பை கபடி, இந்தியா சாம்பியன் : 2வது முறை சாதித்த மகளிர்

PM Modi Wishes Indian Team won Women's World Cup Kabaddi Championship 2025 Winner : மகளிர் உலகக் கோப்பை கபடி தொடரின் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

Kannan

உலகக் கோப்பை கபடி போட்டி

PM Modi Wishes Indian Team won Women's World Cup Kabaddi Championship 2025 Winner : வங்கதேசத்தின் டாக்கா நகரில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கபடி போட்டியில் 11 அணிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டியில் இந்திய அணி, சீன தைபே அணியுடன் மோதி​யது.

முதன்முறையாக இந்தியாவில் இல்லாமல், வெளிநாட்டில் இந்தப் போட்டி நடைபெறுவதால், ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு ஏற்றவாறே இந்தியாவின் ஆட்டமும் அமைந்து இருத்தது.

இந்திய அணி அபாரம்

பரபரப்​பாக நடை​பெற்ற இறுதி ஆட்​டத்​தில் இந்​திய மகளிர் அணி 35-28 என்ற புள்​ளி​கள் கணக்கில் வெற்றி பெற்று தொடர்ச்​சியாக 2-வது முறை​யாக சாம்பியன் பட்​டம் வென்​றது.

இந்திய அணி ஆதிக்கம்

முதல் பாதி ஆட்டநேர முடிவில் இந்திய மகளிர் அணி 20 புள்ளிகளை பெற்றிருந்த நிலையில், சீன தைபே மகளிர் அணியால் 16 புள்ளிகளை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இந்திய மகளிர் அணி 4 புள்ளிகள் வித்தியாசத்தில் முதல் பாதியில் முன்னிலை பெற்றுது.

பின்னர் நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் அபாரமாக செயல்பட்ட இந்திய மகளிர் அணி முன்னிலையைத் தக்கவைத்ததுடன், 15 புள்ளிகளை வென்றது. மறுபக்கம் இறுதிவரை போராடிய சீன தைபே மகளிர் அணியால் இரண்டாம் பாதியில் 12 புள்ளிகளை மட்டுமே எடுக்க முடிந்தது.

இந்திய அணி சாம்பியன்

இதன் மூலம் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 35-28 என்ற புள்ளிகள் கணக்கில் சீன தைபே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு கபடி உலகக் கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றது.

பிரதமர் மோடி வாழ்த்து

மகளிர் அணிக்கை வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தனது எக்ஸ் வலைதள பதி​வில், “கபடி உலகக் கோப்​பையை வென்று தேசத்​தைப் பெரு​மைப்​படுத்​திய நமது இந்​திய மகளிர் கபடி அணிக்கு வாழ்த்​துக்​கள். அவர்​கள் சிறந்த மன உறு​தி, திறமை மற்​றும் அர்ப்​பணிப்பை வெளிப்படுத்தி​யுள்​ளனர்.

அவர்​களின் வெற்றி எண்​ணற்ற இளைஞர்​களை கபடி​யில் ஈடு​பட​வும், பெரியகனவு காண​வும், உயர்ந்த இலக்கை அடைய​வும் ஊக்​குவிக்​கும்” எனத் தெரிவித்துள்ளார்​.

====