Portugal's squad for the FIFA World Cup is led by star player Cristiano Ronaldo as captain google
விளையாட்டு

FIFA WC 2026 : போர்ச்சுகல் கேப்டன் ”கிறிஸ்டியானோ ரொனால்டோ” : இந்தமுறையாவது கோப்பை வெல்லுமா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

ஃபிபா உலகக் கோப்பை தொடருக்கான போர்ச்சுகல் அணியை. நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கேப்டனாக வழி நடத்துகிறார்.

Kannan

ஃபிபா உலகக் கோப்பை தொடர்

ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை ஃபிபா உலகக் கோப்பை தொடர் நடத்தப்பட உள்ளது. அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளில் இந்த தொடர் நடைபெறுகிறது.

48 அணிகள் பங்கேற்பு

மொத்தம் 48 அணிகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடுகின்றன. 39 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் 104 போட்டிகள் விளையாடப்படுகின்றன.

குரூப் சுற்று போட்டிகள்

குரூப் சுற்று போட்டிகள் ஜூன் 11 முதல் 27-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. நாக்-அவுட் சுற்றான ‘ரவுண்ட் ஆப் 32’ சுற்று ஜூன் 29 முதல் ஜூலை 3 வரை நடைபெறுகிறது.

ஜூலை 19 இறுதிப்போட்டி

அதன் பின்னர் காலிறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்கள் ஜூலை 4 முதல் 11-ம் தேதி வரையில் திட்டமிடப்பட்டுள்ளது. இறுதிப் போட்டி ஜூலை 19-ம் தேதி, அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் நடைபெறுகிறது.

குரூப் கே - போர்ச்சுகல் அணி

நேஷன்ஸ் லீக் சமபியனான போர்ச்சுகல் அணி, குரூப்-‘கே’வில் இடம்பெற்றுள்ளது. இதே பிரிவில் காங்கோ, கொலம்பியா, உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் உள்ளன. இந்த தொடரில் காங்கோ உடன் ஜூன் 17ம் தேதி போர்ச்சுகல் அணி விளையாட உள்ளது.

6வது முறை உலகக்கோப்பை - ரொனால்டோ

ஆறாவது முறையாக ரொனால்டோ, உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கிறார். 41 வயதாகும் அவருக்கு இந்தத் தொடர் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இதுவரை கோப்பை வெல்லாத போர்ச்சுகல்

போர்ச்சுகல் அணி இதுவரை உலகக் கோப்பை தொடரில் பட்டம் வென்றது இல்லை. அதிகபட்சமாக மூன்றாம் இடத்தை அந்த அணி பிடித்துள்ளது.

எனவே, 2026 ஃபிபா கோப்பை மிக முக்கியமான ஒன்றாக போர்ச்சுகல் ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.

போர்ச்சுகல் அணி விவரம் :

கிறிஸ்டியானோ ரொனால்டோ - கேப்டன்

கோல்கீப்பர்கள் : டியோகோ கோஸ்டா, ஜோஸ் சா, ரூய் சில்வா, ரிக்கார்டோ வெல்ஹோ

டிஃபெண்டர்கள் : டியோகோ டலோட், மேதியஸ் நூன்ஸ், நெல்சன் செமெடோ, ஜோவா கேன்செலோ, நுனோ மென்டிஸ், கோன்கலோ இனாசியோ, ரெனாடோ வீகா, ரூபன் டயஸ், தாமஸ் அராஜுவோ

மிட்ஃபீல்டர்கள் : ரூபன் நெவ்ஸ், ஜோவா நெவ்ஸ், விட்டின்ஹா, புருனோ பெர்னாண்டஸ், பெர்னார்டோ சில்வா, ஜோவா பெலிக்ஸ், பிரான்சிஸ்கோ டிரின்காவோ, பிரான்சிஸ்கோ கன்சிகாவோ, சாமு கோஸ்டா

முன்கள வீரர்கள் : பெட்ரோ நெட்டோ, ரஃபேல் லியோ, கோன்கலோ குடெஸ், கோன்கலோ ராமோஸ், கிறிஸ்டியானோ ரொனால்டோ

==============