Praggnanandhaa defeats world number one Magnus Carlsen Norway Chess Championship  google
விளையாட்டு

நார்வே செஸ் :உலகின் முன்னணி வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா !

உலகின் முன்னணி செஸ் வீரர்கள் பங்கேற்கும் நார்வே செஸ் தொடர், செஸ் தொடர்களிலேயே மதிப்புமிக்க ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

Rohini

மதிப்புமிக்க நார்வே செஸ்

உலகின் முன்னணி செஸ் வீரர்கள் பங்கேற்கும் நார்வே செஸ் தொடர், செஸ் தொடர்களிலேயே மதிப்புமிக்க ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இது, செஸ் உலகின் விம்பிள்டன் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்தியா சார்பாக நால்வர் பங்கேற்பு

இந்தாண்டுக்கான தொடர் மே 25 தொடங்கி ஜூன் 10 அன்று முடிவடைய இருக்கும் நிலையில் இதில் ஆண்கள் பிரிவில் 6 பேர், பெண்கள் பிரிவில் 6 பேர் என மொத்தம் 12 பேர் பங்குபெற்றுள்ள நிலையில் குகேஷ், பிரக்ஞானந்தா, கோனேரு ஹம்பி, திவ்யா தேஷ்முக் என இந்தியாவிலிருந்து 4 வீரர்கள் விளையாடுகின்றனர்.

நார்வே செஸ் முதல் முறையாக பங்கேற்கும் இந்திய வீராங்கனை

இந்தியாவின் திவ்யா தேஷ்முக உலக சாம்பியனான ஜூ வென்ஜூனை 2-வது ஆட்டத்தில் தோற்கடித்து ஆச்சரியப்படுத்தினார். நார்வே செஸ் தொடரில் திவ்யா விளையாடுவது இதுவே முதல்முறை.

செஸ் ஜாம்பவான் மாக்னஸ்சை வீழ்த்திய பிரக்ஞானந்தா

இதனைத் தொடர்ந்து, நடைபெற்ற மூன்றாவது சுற்றில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா செஸ் ஜாம்பவான் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளனர்

புள்ளி பட்டியலில் முன்னேறிய இந்திய வீரர்கள்

இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு பிரக்ஞானந்தா முன்னேறினார். மற்றொரு தமிழக வீரர் குகேஷ் 4-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளனர்

==============