2017ம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் பட்டம் வென்ற போது, ரபேல் நடால் பயன்படுத்திய டென்னிஸ் ராக்கெட் ரூ.49 லட்சத்துக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
உலகின் முன்னணி டென்னிஸ் வீரர்களில் ஒருவரான ரபேல் நடால் ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர்.
டென்னிஸ் உலகின் ஜாம்பவான்களாக, ரோஜர் பெடரர், ரபேல் நடால் மற்றும் நோவக் ஜோகோவிச்சை குறிப்பிடுவர்.
இவர்கள் டென்னிஸ் உலகின் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
இவர்களுக்கு அடுத்து முக்கிய இடம் பிடிப்பவர் ரபேல் நடால்தான்.
2005ல் பிரெஞ்சு ஓபன் தொடரில் தான் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற அவர், 2006, 2007, 2008 ஆகிய ஆண்டுகளிலும் வரிசையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்று அசத்தினார்.
20 வயதிற்குள் 16 ஏடிபி டூர் பட்டங்களை வென்று தனது திறமையை வெளிப்படுத்தினார் நடால்.
22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், ஒலிம்பிக்கில் 2 முறை தங்கம், 92 ஏடிபி தொடர் பட்டங்கள் நடாலின் கைவசம் உள்ளன.
“களிமண் களத்தின் ராஜா” என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடால், 2027ல் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்ற போது பயன்படுத்திய ராக்கெட் தற்போது ஏலத்தில் விடப்பட்டது.
இது 49 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.
2022ல் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் நடால் பயன்படுத்திய ராக்கெட் ஏற்கனவே, 1.39 லட்சம் டாலருக்கு ஏலத்தில் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.