RCB vs SRH: The first match of the 19th IPL season begins today!  source : google
விளையாட்டு

RCB vs SRH : ஐபிஎல் 19-வது தொடரின் முதல் போட்டி இன்று தொடக்கம் !

வீரரான விராட் கோலி, கடந்த காலங்களில் காட்டிய அதே அதிரடியை இந்த முறையும் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

S Kavitha

RCB vs SRH: The first match of the 19th IPL season begins today!

IPL 19வது தொடரின் முதல் போட்டி, பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று உற்சாகமாக தொடங்க உள்ளது.

இன்று மாலை 7.30 மணிக்கு

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன.

கேப்டன்களாக ரஜத் படிதார், இஷான்கிஷன்

இன்றைய ஆட்டத்தில் ரஜத் படிதார் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாகவும், இஷான் கிஷன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாகவும் உள்ளனர்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

அதிரடி வீரர்களாக விராட் கோலி, பில் சால்ட், ரஜத் படிதார் ஆகியோரும் பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசல்வுட், யாஷ் தயாள், ஜேகப் டஃபி ஆகியோரும் பெங்களூர் அணியில் முக்கிய பங்காற்றுவர் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விராட் கோலியின் அதிரடி ஆட்டம் தொடருமா?

குறிப்பாக அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, கடந்த காலங்களில் காட்டிய அதே அதிரடியை இந்த முறையும் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விராட்டுடன் இணையும் பில் சால்ட் ?

விக்கெட் கீப்பர்-பேட்டரான பில் சால்ட் கோலியுடன் இணைந்து இன்னிங்ஸைத் தொடங்குவார் என கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்டத்தில் நடந்த துயர சம்பவம்

முன்னதாக கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி சாம்பியன் பட்டம் வென்றபோது , பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த அசம்பாவித சம்பவங்களில் பலர் உயிரிழந்தனர்.

தொடக்க விழா ரத்து

அந்த சோக நிகழ்வின் தாக்கம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரின் நாளில் தொடக்க நாளில் ” ஐபிஎல் தொடக்க நாள் விழா “ கொண்டாடப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதற்கு பதிலாக ஐபிஎல் தொடரின் நிறைவு விழா கோலாகலமாக கொண்டாடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

=====