கவாஸ்கர், சச்சின், ராகுல் டிராவிட், விராட் கோலி என பல ஜாம்பவான்கள் இங்கிலாந்து மண்ணில் விளையாடிய இருந்தாலும், இத்தகைய சாதனை படைத்த முதல் இந்தியர் என்ற பெருமையை தட்டிச் சென்றிருக்கிறார் ரிஷப் பண்ட்.
இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், இங்கிலாந்து அணிக்கு சிம்ம சொப்பமாக திகழ்ந்தார் ரிஷப்
பவுலர்களின் பந்துகளை விளாசி தள்ளிய அவர், முதல் இன்னிங்ஸில் 134 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 118 ரன்களும் அடித்தார்.
இதன்மூலம் பல்வேறு சாதனைகள் அவர் புரிந்து இருக்கிறார்.
இங்கிலாந்து மண்ணில் ஒரு போட்டியில் இரண்டு சதம் அடித்த முதல் இந்தியர்.
ஒரே ஆட்டத்தில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த 2வது விக்கெட் கீப்பர். இதற்கு முன்பு இந்த சாதனையை ஆண்டி பிளவர் படைத்து இருந்தார்.
24 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்டி பிளவர் சாதனையை சமன் செய்து இருக்கிறார் ரிஷப் பண்ட்.
வெளிநாட்டு மண்ணில் ஒரே டெஸ்டில் இரண்டு சதம் அடித்த ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் ரிஷப் பண்ட் படைத்திருக்கிறார்.
இதற்கு முன்பு விஜய் ஹசாரே, சுனில் கவாஸ்கர், ராகுல் டிராவிட், விராட் கோலி இந்த சாதனையை படைத்தனர்.
=====