Sourav Ganguly, key figure in Indian cricket, is set to be inducted into ICC Hall of Fame AI generated
விளையாட்டு

ICC ‘Hall of Fame’ : ”சவுரவ் கங்குலிக்கு கௌரவம்” : 12ம் தேதி அறிவிப்பு, 12வது இந்திய வீரர் : உற்சாகத்தில் ரசிகர்கள்..!

இந்திய கிரிக்கெட்டின் மறுமலர்ச்சிக்கு முக்கிய காரணமாக விளங்கிய சவுரவ் கங்குலியின் பெயர், ஐசிசியின் ஹால் ஆப் பேம் பட்டியலில் இடம்பெற உள்ளது.

Kannan

சவுரவ் கங்குலி

Former India captain Sourav Ganguly was inducted into the ICC Hall of Fame, becoming 12th Indian and 10th Indian male cricketer to receive this prestigious honour :

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுபவர் சவுரவ் கங்குலி.

உலக கிரிக்கெட்டில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய வீரர்களுக்கு வழங்கப்படும் ஐசிசியின் ஹால் ஆப் ஃபேம் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறுகிறது.

12வது இந்திய கிரிக்கெட் வீரர்

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜூலை 11 அன்று ஐசிசி வெளியிடும் என்று கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில், இந்த உயரிய அங்கீகாரத்தை பெறும் இந்தியாவின் 12-வது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை சவுரவ் கங்குலி பெறுவார்.

இந்திய அணியின் பெருஞ்சுவர்

இந்திய அணியின் மறுமலர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த கேப்டன்சவுரவ் கங்குலி 1996ல் இங்கிலாந்துக்கு எதிரான தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து உலக கிரிக்கெட்டின் கவனத்தை ஈர்த்தார்.

இந்திய அணியின் தூண்

அதன்பிறகு இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக நிலையான இடத்தை பிடித்த அவர், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து ரன் குவித்து இந்திய அணியின் முக்கிய தூணாக உருவெடுத்தார்.

கேப்டனாக சவுரவ் கங்குலி

2000ம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற சவுரவ் கங்குலி, பல சவால்களை சந்தித்து வந்த அணியை புதிய பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இளம் வீரர்களை ஊக்குவித்தவர்

வெளிநாட்டு மைதானங்களிலும் வெற்றி பெறும் மனநிலையை வீரர்களுக்கு உருவாக்கியதுடன், இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கிய கேப்டனாகவும் சவுரவ் அறியப்படுகிறார்.

அவரது தலைமையில் தான் யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி, ஜாஹிர் கான், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பல திறமையான வீரர்கள் இந்திய அணியில் நிலையான இடம் பிடித்தனர்.

இந்திய அணிக்கு வலுவான அடித்தளம்

இன்று இந்திய அணி உலகின் வலுவான அணிகளில் ஒன்றாக உருவாகியிருப்பதற்கான அடித்தளத்தை அமைத்தவர் கங்குலி என்ற பாராட்டு இன்றும் கிரிக்கெட் உலகில் நிலவுகிறது.

சாதனைகளால் நிறைந்த பயணம்

இந்திய அணிக்காக 311 ஒருநாள் மற்றும் 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சவுரவ் கங்குலி, மொத்தமாக 18,575 ரன்கள் குவித்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்த இந்திய வீரர்களில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்ததாக இந்த சாதனையை எட்டிய வீரர்களில் ஒருவராகவும் அவர் திகழ்கிறார்.

2003 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்ற கேப்டனாகவும் அவரது பெயர் நினைவுகூரப்படுகிறது.

ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர்

ஆஃப் சைட் பகுதியில் எளிதாக ரன்கள் குவிக்கும் திறன் காரணமாக அவர் தனித்துவமான பேட்ஸ்மேனாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.

கிரிக்கெட்டுக்கு பிறகும் பங்களிப்பு

கிரிக்கெட் வாழ்க்கைக்கு பிறகும்பிறகும், சவுரவ் கங்குலி விளையாட்டில் இருந்து விலகவில்லை. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்று, உள்நாட்டு கிரிக்கெட் வளர்ச்சிக்கும் பல்வேறு நிர்வாக மாற்றங்களுக்கும் முக்கிய பங்காற்றினார்.

கிரிக்கெட் நிர்வாகத்திலும் அவர் காட்டிய செயல்பாடு பரவலாக பாராட்டப்பட்டது.

ஹால் ஆப் ஃபேம்

கிரிக்கெட் விளையாட்டில் நீண்ட காலமாக சிறப்பான சாதனைகள் படைத்து, உலக கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்த வீரர்களை கவுரவிக்கும் வகையில் ஐசிசி ஹால் ஆப் ஃபேம் அங்கீகாரத்தை வழங்கி வருகிறது.

இந்த பட்டியலில் இடம்பெறுவது என்பது ஒரு வீரரின் சாதனைகளுக்கு வழங்கப்படும் மிக உயரிய சர்வதேச கவுரவங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்திய வீரர்கள்

இதுவரை இந்தியாவில் இருந்து பிஷன் சிங் பேடி, சுனில் கவாஸ்கர், கபில் தேவ், அனில் கும்ப்ளே, ராகுல் திராவிட், சச்சின் டெண்டுல்கர், வினோ மன்கட், டயானா எடுல்ஜி, வீரேந்திர சேவாக், நீத்து டேவிட் மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

அந்த வரிசையில் சவுரவ் கங்குலியும் இணைய உள்ளார். இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

==============================