South Africa and New Zealand will clash in the first semi-final of the T20 World Cup today Source : Google
விளையாட்டு

T20 WC 2026: முதல் அரையிறுதி போட்டி : தென் ஆப்பிரிக்கா-நியூஸிலாந்து பலப்பரீட்சை : பைனலுக்கு செல்வது யார்!

South Africa vs New Zealand T20 World Cup Semi Final 2026 : உலகக் கோப்பை டி20 போட்டியில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

Kannan

தென் ஆப்பிரிக்கா - நியூஸிலாந்து மோதல்

South Africa vs New Zealand T20 World Cup Semi Final 2026 : சிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் இன்று நடை​பெறும் முதல் அரை இறுதி ஆட்டத்​தில் தென் ஆப்பிரிக்கா - நியூஸிலாந்து அணி​கள் பலப்பரீட்சை நடத்​துகின்​றன.

தோல்வியை சந்திக்காத தென் ஆப்பிரிக்கா

எய்​டன் மார்க்​ரம் தலை​மையி​லான தென் ஆப்​பிரிக்க அணி நடப்பு டி 20 உலகக் கோப்பை தொடரில் இது​வரை தோல்​வியை சந்​திக்​காத அணி​யாக வலம் வரு​கிறது. லீக் சுற்​றில் 4 ஆட்​டங்​கள், சூப்​பர் 8 சுற்​றில் 3 ஆட்​டங்​கள் என தொடர்ச்​சி​யாக 7 ஆட்​டங்​களில் வெற்றி கண்​டிருந்​தது.

வலுவான நிலையில் தென் ஆப்பிரிக்கா

வலு​வான டாப் ஆர்​டர், நடு​வரிசை பேட்​டிங் மற்​றும் பந்​து​வீச்​சில் பல்​வேறு மாறு​பாடு​களை கொண்​டிருப்​பது அணி​யின் பலமாக உள்​ளது. பேட்​டிங்​கில் 175.16 ஸ்டிரைக் ரேட்​டுடன் 268 ரன்​கள் குவித்​துள்ள எய்​டன் மார்க்​ரம் பவர்​பிளே​வில் தாக்​குதல் ஆட்​டம் மேற்​கொள்​ளக்​கூடிய​வ​ராக உள்​ளார்.

அதிரடி வீரர் மார்க்ரம்

நடப்பு தொடரில் 3 அரை சதங்​கள் விளாசி உள்ள அவரது அதி​கபட்ச ஸ்கோர் 86* ஆக உள்​ளது. அவரிடம் இருந்து மேலும் ஒரு உயர்​மட்ட செயல் திறன் வெளிப்​படக்​கூடும்.

வேகப்​பந்து வீச்​சில் காகிசோ ரபா​டா, லுங்கி நிகிடி, மார்கோ யான்​சன், கார்​பின் போஷ் ஆகியோர் வலு​வான செயல் திறனை வெளிப்​படுத்​தக்​கூடிய​வர்​கள்.

மிட்​செல் சாண்ட்​னர் தலை​மையி​லான நியூஸிலாந்து அணி லீக் சுற்​றில் 3 வெற்​றி, ஒரு தோல்​வியை பதிவு செய்​தது. தொடர்ந்து சூப்​பர் 8 சுற்​றில் பாகிஸ்​தானுடன் மோத இருந்த ஆட்​டம் மழை காரண​மாக ரத்​தானது.

நியூசிலாந்தும் வலுவான அணி தான்

இலங்கை அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் வெற்றி கண்ட நிலை​யில் இங்​கிலாந்து அணி​யிடம் தோல்வி அடைந்​தது. எனினும் நிகர ரன் ரேட் காரண​மாக பாகிஸ்​தான் அணியை தொடரில் இருந்து வெளி​யேற்றி அரை இறுதி வாய்ப்பை பெற்​றிருந்​தது நியூஸிலாந்து அணி.

அதிரடி தொடக்க ஆட்டக்காரர்கள்

டாப் ஆர்​டரில் டிம் ஷெய்​பர்ட், ஃபின் ஆலன் ஜோடி அதிரடி தொடக்​கம் அமைத்​துக் கொடுப்​பவர்​களாக உள்​ளனர். ஆனால் நடு​வரிசை​யில் கிளென் பிலிப்​ஸ், ரச்​சின் ரவீந்​தி​ரா, டேரில் மிட்​செல், மார்க் சாப்​மேன் ஆகியோரிடம் இருந்து இது​வரை பெரிய அளவி​லான தாக்​கத்தை ஏற்​படுத்​தக்​கூடிய செயல்திறன் வெளிப்​பட​வில்​லை.

இன்​றைய ஆட்​டம் முக்​கி​யத்​து​வம் வாய்ந்​தது என்​ப​தால் நடு​வரிசை பேட்​ஸ்​மேன்​கள் பொறுப்​புடன் செயல்​படு​வ​தில் கூடு​தல் கவனம் செலுத்​தக்​கூடும்.

வலுவான பந்துவீச்சு

பந்​து​வீச்​சில் நியூசிலாந்து அணி கூடுதல் கவனம் செலுத்த இருக்கிறது. சுழலில் மிட்​செல் சாண்ட்​னர் நடப்பு தொடரில் ஓவருக்கு சராசரி​யாக 6.35 ரன்​களையே விட்​டுக் ​கொடுத்​துள்​ளார். மேலும் 9 விக்​கெட்​கள் கைப்​பற்​றி​யுள்ள ரச்​சின் ரவீந்​தி​ரா, கிளென் பிலிப்​ஸ், கோல் மெக்​கோன்சி ஆகியோ​ரும் பலம் சேர்க்​கக்​கூடும்.

பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம்

நடப்பு உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்​பிரிக்கா - நியூஸிலாந்து அணி​கள் 2-வது முறை​யாக மோதுகின்றன. போட்டி நடை​பெறும் ஈடன் கார்​டன் மைதானம் பேட்​டிங்குக்கு சாதக​மான​தாக இருக்​கும் என கணிக்​கப்​பட்​டுள்​ளது. எனவே, முதலில் பேட் செய்​யும் அணி 200 ரன்​களுக்கு மேல் குவிக்க முயற்​சிக்​கக்​கூடும்.

தென் ஆப்​பிரிக்கா ஆதிக்​கம்

இன்​றைய ஆட்​டத்​தில் வெற்றி பெறும் அணி 8-ம் தேதி நடை​பெறும் இறு​திப் போட்​டிக்கு முன்​னேறும். டி20 உலகக் கோப்பை வரலாற்​றில் நியூஸிலாந்து அணிக்கு எதி​ராக தென்​ ஆப்​பிரிக்​கா அணி 5 முறை மோதி உள்​ளது. இதில்​ அனைத்​தி​லும்​ தென்​ ஆப்​பிரிக்​க அணியே வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

============