SA vs ZIM Test Match 2025 Update : ஜிம்பாப்வே சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, இரண்டு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் புலவாயோவில் நடந்தது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 418 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே 251 ரன்களை எடுத்தது.
இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 369 ரன் குவித்தது. இதையடுத்து, 537 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கியது ஜிம்பாப்வே அணி.
3வது நாள் ஆட்ட முடிவில் அந்த அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்து, 505 ரன் பின்தங்கி இருந்தது. நேற்று நடைபெற்ற 4ம் நாள் ஆட்டத்தில், தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர் கார்பின் தனது மிரட்டலை வெளிப்படுத்தினார்.
ரன் ஏதும் எடுக்காலம் நிக் வெச் வெளியேற, 26 ரன்களுக்கு சீன் வில்லியம்ஸ் அவுட் ஆனார். ரன் எடுக்க முடியாமல் ஜிம்பாப்வே அணி திணறியது. கேப்டன் எர்வின், மசகட்சா இணை சற்று தாக்குப் பிடிக்க, ஸ்கோர் 150 ரன்களை கடந்தது.
மீண்டும் களம் புகுந்த கார்பின், எர்வினை, 49 ரன்னில் அவுட்டாக்கினார். நிதானமாக விளையாட ஜிம்பாப்வே, 208 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
கார்பின் 5 விக்கெட் சாய்த்தார்.
328 ரன்கள் வித்தியாசத்தில் அபரா வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா, 1-0 என முன்னிலை பெற்றது.
====