T20 World Cup 2026: Finn Allen sets historic record in New Zealand vs. United Arab Emirates Match Highlights in Tamil Source : Jio Hotstar - New Zealand vs. United Arab Emirates Match Highlights in Tamil
விளையாட்டு

வரலாற்று சாதனை படைத்த ஃபின் ஆலன்- குஷியில் நியூசிலாந்து ரசிகர்கள்!

New Zealand vs. United Arab Emirates : 2026 ஐசிசி டி20 உலகக்கோப்பைத் தொடரின் 11வது லீக் ஆட்டத்தில், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக நியூசிலாந்து வீரர் ஃபின் ஆலன் வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.

Baala Murugan

இமாலய சாதனையை முறியடித்த ஃபின் ஆலன்

T20 World Cup 2026: New Zealand vs. United Arab Emirates Match Highlights in Tamil : சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் ஆடிய யுஏஇ அணி நிர்ணயித்த 174 ரன்கள் என்ற இலக்கை நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி வெறும் 15.2 ஓவர்களில் எட்டிப் பிடித்தது. தொடக்க வீரர்களான டிம் சீஃபர்ட் மற்றும் ஃபின் ஆலன் ஜோடி யுஏஇ பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. குறிப்பாக, 50 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் குவித்த ஃபின் ஆலன், ஆட்டத்தின் போக்கை முற்றிலுமாக மாற்றினார்.

இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம் டி20 கிரிக்கெட்டில் 5000 ரன்கள் என்ற மைல்கல்லை மிகக் குறைந்த பந்துகளில் எட்டிய வீரர் என்ற உலக சாதனையை ஃபின் ஆலன் படைத்துள்ளார். ஃபின் ஆலன் வெறும் 2854 பந்துகளில் இந்த இலக்கை அடைந்து, இதற்கு முன்னதாக இந்திய வீரர் அபிஷேக் சர்மா (2898 பந்துகள்) வைத்திருந்த சாதனையை முறியடித்தார். ஏறத்தாழ 44 பந்துகள் வித்தியாசத்தில் இந்த இமாலய சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கையில் நியூசிலாந்து அணி

சமீபகாலமாக பிக் பேஷ் லீக் மற்றும் சர்வதேசப் போட்டிகளில் அபாரமான ஃபார்மில் இருக்கும் ஃபின் ஆலன், உலகக்கோப்பைத் தொடரின் தொடக்கத்திலேயே இத்தகைய ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது நியூசிலாந்து அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது. இதனால், தொடர்ந்து அவர் தனது ஆட்டத்தை உலககோப்பை தொடர் முழுதும் வெளிப்படுத்துவர் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இவரது ஆட்டம் இதே ஃபார்மில் தொடர்ந்தால் நியூசிலாந்து நாட்டை எதிர்கொள்ளும் மற்ற அணிகளுக்கும் கடும் சவாலாக போட்டிகள் இருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.