T20 World Cup 2026: Full details of players with most runs, sixes and wickets google
விளையாட்டு

டி20 உலககோப்பை 2026: அதிக ரன்கள், அதிக சிக்சர்கள், அதிக விக்கெட் எடுத்த வீரர்களின் முழு விவரம் இதோ!

டி20 உலககோப்பை 2026 தொடரானது நடந்து வரும் நிலையில் அதன் இறுதி ஆட்டத்தில் நியூசாலந்தை வீழ்த்தி இந்திய அபார வெற்றி பெற்றது .இதில் இதுவரை அதிக ரன்கள், விக்கெட்டை வீரர்கள் பதிவு செய்தனர்.

Rohini

அதிக சதம் அடித்தவர்கள்

ICC T20 World Cup 2026 Highlights : இந்த உலகக் கோப்பைத் தொடரில் மொத்தம் ஆறு சதங்கள் பதிவு செய்யப்பட்டன . பாகிஸ்தானின் சாஹிப்சாதா ஃபர்ஹான் மட்டுமே இரண்டு சதங்களை அடித்து தனித்து விளங்கினார்.

நியூசிலாந்தின் ஃபின் ஆலன், மேற்கிந்திய தீவுகளின் ஜேக்கப் பெத்தெல், இங்கிலாந்தின் ஹாரி புரூக், இலங்கையின் பதும் நிசங்கா மற்றும் கனடா வீரர் யுவராஜ் சாம்ரா ஆகியோரும் தலா ஒரு சதம் அடித்து அசத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக சிக்ஸர்கள்

அதிக சிக்ஸர் எண்ணிக்கையை பதிவு செய்ததன் மூலம் இந்திய அணியின் சஞ்சு சாம்சன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார் .அவர் மொத்தம் 24 சிக்ஸர்களுடன் தொடர் முழுவதும் அதிரடியாக விளையாடினர் .

நியூசிலாந்தின் ஃபின் ஆலன் 20 சிக்ஸர்களுடனும், மேற்கிந்திய தீவுகளின் ஷிம்ரோன் ஹெட்மையர் 19 சிக்ஸர்களுடனும், பாகிஸ்தானின் சாஹிப்சாதா ஃபர்ஹான் 18 சிக்ஸர்களுடனும், இந்தியாவின் இஷான் கிஷன் 18 சிக்ஸர்களுடனும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர்.

அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள்

பந்துவீச்சுப் பட்டியலில் கடும் போட்டி நிலவிய நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, 12.43 என்ற சராசரியுடன் 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றி முதலிடம் பிடித்தார். அவருடன் இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தியும் 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதிகபட்ச அணி ஸ்கோர்கள்

உலகக் கோப்பைத் தொடரில் பல அணிகள் 200 ரன்களுக்கு மேல் குவிந்திருந்தன .அந்த நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் பதிவு செய்த 254/6 ரன்கள், இந்தத் தொடரின் அதிகபட்ச அணி ஸ்கோராகப் பதிவானது.

இந்தச் சாதனையைத் தொடர்ந்து, இந்தியா ஜிம்பாப்வேக்கு எதிராக 256/4, நியூசிலாந்துக்கு எதிராக 255/5, மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக 253/7 என்று வலுவான ஸ்கோர்களை எட்டியது. இங்கிலாந்து அணியும் இந்தியாவுக்கு எதிராக 246/7 என்ற அதிகபட்ச ரன் எண்ணிக்கையைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

அதிக ரன் வித்தியாசத்தில் வென்ற ஆட்டங்கள்

அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றிகளைப் பதிவு செய்ததிலும் சில அணிகள் ஆதிக்கம் காட்டின .இந்திய அணி ஐந்து பெரிய வெற்றிகளில் மூன்றை பதிவு செய்தது.

ஜிம்பாப்வேயை 107 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் வீழ்த்தியது இந்தத் தொடரின் மிகப்பெரிய வெற்றியாக இருந்தது. மேலும் இந்தியா நியூசிலாந்துக்கு எதிராக 96 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றிகளைப் பதிவு செய்தது.