The Indian team achieved a magnificent victory by 165 runs in the first Test match against Sri Lanka Ai generated
விளையாட்டு

”முதல் டெஸ்ஸ் இந்தியா அசத்தல் வெற்றி” : 165 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது : WTC இறுதி போட்டிக்கு வாய்ப்பு!

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது

Kannan

இந்தியா - இலங்கை முதல் டெஸ்ட்

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட்கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டி காலே நகரில் நடைபெற்றது.

இந்திய அணி பேட்டிங் - 462 ரன்கள்

டாஸில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். அதன்படி முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 462 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் தேவ்தத் படிக்கல் 167 ரன்களும், கே.எல். ராகுல் 82 ரன்களும், விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெல் 51 ரன்களும் எடுத்தனர்.

இலங்கை அணி 284 ரன்கள்

அதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணியை 284 ரன்களுக்குள் இந்திய பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தினர். அந்த அணியின் சோனல் தினுஷா அதிகபட்சமாக 100 ரன்களும், விக்கெட் கீப்பர் நிரோஷன் திக்வெல்லா 80 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணி தரப்பில் மானவ் சுதார் 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

372 ரன்கள் இலக்கை துரத்திய இலங்கை

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 193 ரன்களுக்குள் சுருண்டது. ரிஷப் பண்ட் 66 ரன்களும், தேவ்தத் படிக்கல் 44 ரன்களும் எடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, 372 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை நேற்று நான்காவது நாள் ஆட்டத்தில் தொடர்ந்தது.

மிரட்டிய இந்திய பவுலர்கள்

இந்த மைதானத்தில் 350 ரன்களுக்கு மேலான இலக்கை இதுவரை எந்த அணியும் எட்டிப்பிடித்ததில்லை. சிறிது நேர மழை குறுக்கீட்டிற்குப் பிறகு இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இலங்கை பேட்ஸ்மேன்களை இந்திய பந்துவீச்சாளர்கள் மிரட்டினர்.

தொடக்க ஆட்டக்காரர்களான நிஷான் மதுஷ்கா 6 ரன்னிலும், லஹிரு உதார 16 ரன்னிலும், அடுத்ததாகக் களமிறங்கிய பசிந்து சூரியபண்டார டக்-அவுட்டிலும், கமிந்து மெண்டிஸ் 2 ரன்களிலும் வெளியேற, இலங்கை அணி 47 ரன்னில் 4 விக்கெட்டுகளைப் பறிகொடுத்துத் தத்தளித்தது.

சரிவில் இருந்து மீண்ட இலங்கை

எனினும் கேப்டன் தனஞ்சய டி சில்வா மற்றும் சோனல் தினுஷா ஆகியோர் கைகோர்த்து அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். இதன் மூலம் நேற்றைய நாள் முடிவில் 34 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு இலங்கை அணி 84 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி 600வது டெஸ்ட்

ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணிக்கு, இது நாட்டின் 600-வது டெஸ்ட் போட்டி என்பதால் இந்த வெற்றி கூடுதல் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

மானவ் சுதர் 6 விக்கெட்டுகள்

இந்திய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதர் இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாகப் பந்துவீசி 55 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

ஒட்டுமொத்தமாக இப்போட்டியில் அவர் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்களுடன் பந்துவீச்சை பகிர்ந்து கொண்ட போதிலும், சுழலுக்குப் பெரிதாக சாதகமில்லாத காலி ஆடுகளத்தில் அவரது சிறப்பான செயல்பாடு இந்தியாவின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

206 ரன்களுக்கு சுருண்ட இலங்கை

372 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் விளையாடிய இலங்கை அணி, மானவ் சுதரின் சுழலில் சிக்கி 206 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

ஐந்தாம் நாள் ஆட்டத்தின் தொடக்கத்தில் இலங்கை அணி நிதானமாக விளையாடியது. குறிப்பாக கேப்டன் தனஞ்சய டி சில்வா 59 ரன்கள் மற்றும் சோனல் தினுஷா ஜோடி இணைந்து 95 ரன்கள் சேர்த்ததன் மூலம் இந்திய வீச்சாளர்களுக்கு சவாலாக விளங்கினர்.

இவர்களின் சிறப்பானபாப்ட்னர்ஷிப் ரவீந்திர ஜடேஜா முக்கிய தருணத்தில் தனஞ்சய டி சில்வாவின் விக்கெட்டை வீழ்த்தி உடைத்தார். இது போட்டியில் இந்தியாவிற்கு சாதகமான திருப்புமுனையாக அமைந்தது.

165 ரன்கள் வித்தியாசம் - இந்தியா வெற்றி

இறுதியில் 206 ரன்களுக்கு இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

ஆக.23 இரண்டாவது டெஸ்ட்

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்புவில் வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி தொடங்குகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முன்னேறிய இந்தியா

இந்த வெற்றியின் மூலம், நடப்பு 2025-27 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் இந்திய அணி தனது 10 போட்டிகளில் 5-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதனால் இந்தியாவின் புள்ளிகள் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளதுடன், 'வெற்றிப் புள்ளி விகிதம் 53.33 சதவீதமாக உயர்ந்துள்ளது.

=============