USA thrashed Paraguay, scoring four goals in their opening World Cup match google
விளையாட்டு

FIFA Worldcup : ”முதல் ஆட்டத்திலேயே அதிரடி வெற்றி” : பராகுவாவை பந்தாடிய அமெரிக்கா, 4-1க்கு என்ற கணக்கில் வெற்றி...!

உலகக் கோப்பை முதல் போட்டியிலேயே 4 கோல்கள் அடித்து, பராகுவாவை பந்தாடியது அமெரிக்கா.

Kannan

FIFA Worldcup - அமெரிக்க அணி

உலகக்கோப்பை கால்ந்து பந்து தொடர் நடைபெற்று வருகிறது. 2022ம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பையில் 4 ஆட்டங்களில் மட்டுமே விளையாடிய அமெரிக்கா 3 கோல்கள் மட்டுமே அடித்து இருந்தது.

அமெரிக்கா vs பராகுவே

இந்த ஆண்டுக்கான தொடரில், லாஸ் ஏஞ்சல்ஸ் நடைபெற்ற ஆட்டத்தில், அமெரிக்க அணி வெற்றியுடன் தனது கணக்கை தொடங்கியுள்ளது. பராகுவே அணியோடு அமெரிக்க மோதியது.

அமெரிக்க வீரர்கள் சிறப்பான ஆட்டம்

70,492 ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், தொடக்க விசில் ஒலித்தது முதல் அமெரிக்க வீரர்கள் பந்தின் கட்டுப்பாட்டை தங்கள் வசம் வைத்திருந்தனர்.

கிறிஸ்டியன் புலிசிக் உருவாக்கிய தாக்குதல்கள் பராகுவே பாதுகாப்பு வரிசைக்கு தொடர்ந்து சவாலாக அமைந்தன.

பலோகன் இரண்டு கொல்கள்

அதன் பலனாக முதல் பாதியிலேயே மூன்று கோல்கள் விழுந்தன. அமெரிக்காவின் பலோகன் இரண்டு கோல்கள் அடிக்க, மற்றொரு கோல் பராகுவே வீரரின் சொந்த கோலாக பதிவானது. இடைவேளைக்கு செல்லும்போது அமெரிக்கா 3-0 என முன்னிலையில் இருந்தது.

ஆக்ரோஷம் காட்டிய பராகுவே

இரண்டாவது பாதியில் பராகுவே சற்று ஆக்ரோஷமாக விளையாடியது. ஒரு கோலை அடித்து கணக்கைத் தொடங்கிய அந்த அணி, ஆட்டத்திற்குள் மீண்டும் வர முயற்சி செய்தது. ஆனால் அமெரிக்காவின் பாதுகாப்பு வரிசை அதற்கு எந்த வாய்ப்பையும் கொடுக்கவில்லை.

4வது கோல் போட்ட அமெரிக்கா

ஆட்டம் முடிவை நெருங்கியபோது ஜியோ ரெய்னா அடித்த கோல், அமெரிக்க ரசிகர்களின் கொண்டாட்டத்தை இரட்டிப்பாக்கியது. அதன்பிறகு இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியாததால், போட்டி 4-1 என்ற கணக்கில் நிறைவடைந்தது.

கடந்த கத்தார் உலகக்கோப்பையில் நான்கு போட்டிகளில் சேர்த்து மூன்று கோல்கள் மட்டுமே அடித்திருந்த அமெரிக்கா, இம்முறை முதல் ஆட்டத்திலேயே நான்கு கோல்கள் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சொந்த மண்ணில் அசத்தல்

32 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் உலகக்கோப்பையை நடத்தும் அமெரிக்க அணிக்கு இந்த வெற்றி உற்சாகமான தொடக்கத்தை வழங்கியுள்ளது.

மறுபுறம், 16 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பை மேடைக்கு திரும்பிய பராகுவே, தோல்வியுடன் தனது பயணத்தை தொடங்கியுள்ளது.

சொந்த மண்ணில் சாதிக்கும் அமெரிக்கா

32 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் உலகக்கோப்பையை நடத்தும் அமெரிக்க அணிக்கு இந்த வெற்றி உற்சாகமான தொடக்கத்தை வழங்கியுள்ளது.

16 ஆண்டுகளுக்கு பிறகு பராகுவே

மறுபுறம், 16 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பை மேடைக்கு திரும்பிய பராகுவே, தோல்வியுடன் தனது பயணத்தை தொடங்கியுள்ளது.

=====================