Vaibhav Suryavanshi became the youngest player to score 500 or more runs in an IPL series google
விளையாட்டு

IPL 2026 : ஒரு ஐபிஎல் தொடரில் 500 ரன்கள் : 15 வயதில் சாதித்த வைபவ் சூர்யவன்ஷி! : அதிக சிக்சரிலும் அசத்தல்...

ஒரு ஐபிஎல் தொடரில் குறைந்த வயதில் 500 மற்​றும் அதற்கு அதி​க​மாக ரன்​கள் குவித்த முதல் இளம் வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்​தார்.

Kannan

இளம்புயல் வைபவ் சூர்யவன்ஷி

நடப்பு ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரது சிக்சர்களும், பவுண்டரிகளும், குவிக்கும் ரன்களும் பேசுபொருளாகி வருகின்றன.

சூர்யவன்ஷிக்கான ரசிகர்கள் கூட்டமும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவரது அபார ஆட்டத்தை பார்த்து, இந்தியா ஏ அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

சூர்யவன்ஷி அதிரடி

ஜெய்ப்​பூரில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்​கெட் வித்​தி​யாசத்​தில் லக்னோ அணியை வென்​றது. இந்த ஆட்​டத்​தில் ராஜஸ்​தான் வீரர் வைபவ் சூர்​ய​வன்ஷி 38 பந்​துகளில் 93 ரன்​களை (10 சிக்​ஸர், 7 பவுண்​டரி) விளாசித் தள்​ளி​னார்.

ஐபிஎல் தொடரில் 500 ரன்கள்

இதன்​மூலம் ஒரு ஐபிஎல் தொடரில் 500 அல்லது அதற்கு மேற்​பட்ட ரன்​களைக் குவித்த இளம் வயது வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்​ய​வன்ஷி எட்​டி​னார். 15 வயதிலேயே இந்த சாதனையை அவர் எட்​டி​யுள்​ளார்.

ரிஷப் பந்த் சாதனை முறியடிப்பு

இதற்கு முன்பு 2018-ல் டெல்லி டேர்​டெ​வில்ஸ் அணிக்​காக விளையாடிய ரிஷப் பந்த், குறைந்த வயதில் 500 அல்​லது அதற்கு மேற்​பட்ட ரன்​களைக் குவித்த இளம் வீரர் என்ற சாதனையைச் செய்​திருந்​தார். அப்​போது ரிஷப் பந்த்து​க்கு வயது 20 ஆகும்.

ஸ்டிரைக் ரேட்டிலும் சாதனை

தற்​போது அந்த சாதனையை, வைபவ் சூர்​ய​வன்ஷி முறியடித்துள்ளார். மேலும், ஒரு ஐபிஎல் தொடரில் 500 அல்​லது அதற்கு அதி​க​மான ரன்​களைக் குவித்​தவர்​கள் பட்​டியலில் அதிகமான ஸ்டிரைக் ரேட்டை (236.3) வைபவ் சூர்​ய​வன்ஷி வசப்படுத்தி இருக்கிறார்.

ஸ்டிரைக் ரேட் வரிசையில் 2ம் இடத்தில் ஆந்த்ரே ரஸ்​ஸல் (204.8 ) 3வது இடத்​தில் அபிஷேக் சர்மா (202.0) , 4வது இடத்​தில் நிக்​கோலஸ் பூரன் (196.2) 5-வது இடத்​தில் டிரா​விஸ் ஹெட் (191.2) உள்ளனர்.

அதிக சிக்சர்கள் 2வது இடம்

மேலும் ஒரு ஐபிஎல் தொடரில் அதிக சிக்​ஸர்​கள் விளாசி​ய​வர்​கள் வரிசை​யில் 2-வது இடத்தை சூர்​ய​வன்ஷி பிடித்​துள்​ளார். இந்த ஆண்​டில் இது​வரை அவர் 53 சிக்​ஸர்​களை விளாசி​யுள்​ளார். இந்தப் பட்​டியலில் கிறிஸ் கெயில் முதலிடத்​தில் உள்​ளார். அவர் 2012 சீசனில் 59 சிக்​ஸர்​களை அடித்​திருந்​தார்.

===================