Vaibhav Suryavanshi's younger brother, Aashirwad, has amazed everyone by scoring a century off 87 balls google
விளையாட்டு

கிரிக்கெட் புலிகள் : ”87 பந்துகளில் சதம், 20 பவுண்டரிகள்" : 10 வயது ஆசிர்வாத் சாதனை : தம்பியை பாராட்டி தள்ளும் வைபவ்...

வைபவ் சூர்யவன்ஷியின் தம்பியான ஆசிர்வாத், 87 பந்துகளில் சதம் அடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்.

Kannan

அதிரடி நாயகன் சூர்யவன்ஷி

15-year-old, Aashirwad, the younger brother of the Rajasthan Royals star, smashed 103 runs off 87 balls in a local match in Bihar. The 10-year-old smashed 20 boundaries and one six, scoring at a strike rate of 118.39 : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் புயலாக அழைக்கப்படுபவர், புதிய வரவான வைபவ் சூர்யவன்ஷி. 15 வயதே ஆன இவர் ஐபிஎல் கிரிக்கெட் ராஜஸ்தான் அணிக்காக 700க்கு அதிகமாக ரன்கள் குவித்து, தொடர் நாயகன் விருதை வென்றார்.

சிக்சர் நாயகன் வைபவ்

இந்திய அணிக்கு தேர்வாகி கிரிக்கெட் உலகத்தையே மிரட்டி வருகிறார் வைபவ் சூர்யவன்ஷி. பும்ரா, கம்மின்ஸ், ஸ்டார்க், ஹசல்வுட் என உலகத்தரம் வாய்ந்த பவுலர்களை எல்லாம் சிக்சர்களுக்கு பந்தாடி வரும் சூர்யவன்ஷி, ஒட்டுமொத்தமாக உலக கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

வைபவ்வின் தம்பி ஆசிர்வாத்

இந்தநிலையில் வைபவ்வின் தம்பியும் கிரிக்கெட்டில் தனது அசத்தலான ஆட்டத்தை தொடங்கி இருக்கிறார். 10 வயதாகும் ஆசிர்வாத் தாஜ்பூர் கிரிக்கெட் அகாடமி அணிக்காக 87 பந்துகளில் 103 ரன்கள் அடித்து தலைசிறந்த ஆட்டம் ஆடியுள்ளார்.

சதம் அடித்து அசத்தல்

20 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கிய இந்த இன்னிங்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி, வரவேற்பை பெற்று வருகிறது. 10 வயதில் அதிரடியாக விளையாடி சதம் அடிப்பது என்பது யாரும் நினைத்து பார்க்க முடியாத ஒன்று.

ஸ்டிரைக் ரேட் 118.39

அவரது இன்னிங்ஸின் ஸ்டிரைக் ரேட் 118.39 ஆக இருந்தது. 10 வயதான தன்னுடைய தம்பியின் ஆட்டத்தை பாராட்டி இணையத்தில் பதிவிட்டுள்ளார் சூர்யவன்ஷி.

ஒரே குடும்பத்தில் இருந்து இரண்டு பேர் அதிரடி ஆட்டம் மூலம், இந்திய கிரிக்கெட் அமைப்புகள் வருவது வரவேற்கத்தக்கதாகும்.

============