Videos related to FIFA World Cup 2026 have set a record by garnering over 200 billion views on YouTube AI generated
விளையாட்டு

FIFA Youtube Record : ”யூடியூபில் 20,000 கோடி பார்வைகள்” : ரசிகர்களை கட்டிப் போட்ட Content கிரியேட்டர்கள்...!

FIFA உலகக் கோப்பை 2026 தொடர்பான காணொளிகள் YouTube-ல் 200 பில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று சாதனை படைத்து இருக்கிறது.

Kannan

FIFA World Cup 2026 set all-time viewing records on YouTube, drawing over 1.7 billion unique viewers and pushing lifetime platform views for World Cup content past 200 billion

உலகக்கோப்பை கால்பந்து

கால்பந்து உலகின் மிகப்பெரிய நிகழ்வான ஃபிஃபா உலகக் கோப்பை 2026 நடந்து முடிந்து இருக்கிறது. யுடியூப் தளத்தின் வரலாற்றிலேயே அதிகம் பார்க்கப்பட்ட உலகக் கோப்பையாக இது சாதித்து இருக்கிறது. .

இதை சுந்தர் பிச்சை மற்றும் யூடியூப் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) நீல் மோகன் ஆகியோர் சமூக ஊடகங்கள் வாயிலாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

சாதனையை பகிர்ந்த சுந்தர் பிச்சை

உலகக்கோப்பை தொடர் முழுவதையும், 170 கோடிக்கும் அதிகமான தனித்துவமான பார்வையாளர்கள் யூடியூபில் உலகக் கோப்பை தொடர்பான காணொளிகள் மூலம் பார்த்துள்ளனர்.

யூடியூப் வரலாற்றில் சாதனை

யூடியூப் வரலாற்றிலேயே இதுவே அதிக மக்களால் பார்க்கப்பட்ட உலகக் கோப்பைத் தொடர் என்றும், இதன் மூலம் மொத்தப் பார்வைகளின் எண்ணிக்கை 20,000 கோடியைக் (200 பில்லியன்) கடந்துள்ளதாகவும் சுந்தர் பிச்சை எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பகிர்ந்துள்ளார்.

Content கிரியேட்டர்கள்

கால்பந்து ரசிகர்களின் உற்சாகத்தை அதிகரிப்பதில் Content கிரியேட்டர்கள் ஆற்றிய முக்கியப் பங்கை யூடியூப் தலைமைச் செயல் அதிகாரி நீல் மோகன் வெகுவாக பாராட்டி இருக்கிறார்.

பார்வையாளர்களை ஈர்த்த வர்ணனைகள்

உலகெங்கிலும் உள்ள யூடியூப் கிரியேட்டர்கள் வழங்கிய தனித்துவமான வர்ணனைகளும் பகுப்பாய்வுகளும் 2.5 பில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றன.

முதல் 'கிரியேட்டர் கப்' போட்டியின் நேரலை ஒளிபரப்பு 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை ஈர்த்தது.

தொடர் முழுவதும் ரசிகர்களுக்குப் பல அற்புதமான அனுபவங்களை வழங்கிய அனைத்து கூட்டாளிகள், யூடியூப் படைப்பாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீல் மோகன் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.

ஸ்பெயின் அணி சாம்பியன்

வரலாற்றுச் சிறப்புமிக்க உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில், வலிமைமிக்க அணிகளான ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா இடையே நடைபெற்றது.

கூடுதல் நேரத்தில் 106-வது நிமிடத்தில் ஃபெர்ரான் டோரஸ் அடித்த வெற்றி கோலின் மூலம், ஸ்பெயின் அணி இரண்டாவது முறையாக ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பையை கைப்பற்றியது.

கால்பந்தில் ஸ்பெயினின் ஆதிக்கம்

16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. ஏற்கனவே ஐரோப்பிய சாம்பியன் பட்டத்தையும் வென்றிருந்த ஸ்பெயின், தற்போது உலகக் கோப்பையையும் கைப்பற்றி சர்வதேச கால்பந்தில் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்துள்ளது.

கவனம் ஈர்த்த எம்பாப்பே

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணியின் கேப்டனான கிலியன் எம்பாப்பே தனது அபாரமான ஆட்டத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இந்த தொடரில் 8 போட்டிகளில் விளையாடிய அவர், மொத்தம் 10 கோல்களை அடித்ததுடன், சக வீரர்கள் மேலும் 4 கோல்கள் அடிக்கவும் வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தார்.

எம்பாப்பே 'கோல்டன் ஷூ'

இந்த உலகக் கோப்பை தொடரின் அதிக கோல் அடித்த வீரருக்கான 'கோல்டன் ஷூ' விருதை அவர் வென்றுள்ளார்.

இந்த 'கோல்டன் ஷூ' விருதின் மூலம் எம்பாப்பே உலகக் கால்பந்து வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளார்.

எம்பாப்பே சாதனை

உலகக் கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 2 முறை 'கோல்டன் ஷூ' விருதை வென்ற முதல் வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்து இருக்கிறது. இது போன்ற ஒரு சாதனையை இன்னொரு வீரர் நிகழ்த்துவது என்பது அவ்வளவு எளிதாக இருக்காது.

===================