Women's Archery Triumph Extends India's Medal Haul at Asian Games 2026 in japan Ai Generated
விளையாட்டு

ஆசிய விளையாட்டு இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் : வில்வித்தையில் மகளிர் அணி அசத்தல்..!

தென்கொரியாவை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய மகளிர் வில்வித்தை அணி ; ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் மேலும் ஒரு சாதனை ...

NARENDRAN K

ஆசிய விளையாட்டு போட்டி 2026:

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா மேலும் ஒரு தங்கப் பதக்கத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

வில்வித்தை மகளிர் பிரிவில் இந்திய அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.

இந்திய மகளிர் அணியின் அபார வெற்றி :

இந்திய அணிக்காக ஜோதி சுரேகா வென்னம், அதிதி கோபிசந்த் சுவாமி மற்றும் குஷ்பு அதியோர் ஆகியோர் களமிறங்கினர்.

தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீராங்கனைகள், இறுதிப்போட்டியில் தென்கொரியாவை எதிர்கொண்டனர்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றியை கைப்பற்றி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.

வில்வித்தையில் இந்தியாவின் சாதனைப் பயணம் :

ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் இந்தியா வில்ல்வித்தை பிரிவில் தொடர்ந்து சிறப்பான சாதனைகளை பதிவு செய்து வருகிறது.

இந்த தங்கத்துடன் சேர்த்து இந்தியா இதுவரை வில்வித்தையில் மொத்தம் 67 பதக்கங்களை வென்றுள்ளது.

அதில் 7 தங்கம், 23 வெள்ளி மற்றும் 33 வெண்கலப் பதக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

பதக்க எண்ணிக்கையை உயர்த்திய தங்கம் :

இந்த புதிய தங்கப் பதக்கம் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது.

குறிப்பாக மகளிர் வில்ல்வித்தை அணியின் இந்த வெற்றி, இந்திய விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் ஆதிக்கம் செலுத்திய இந்திய பெண்கள் :

வில்வித்தை போட்டிகளில் இந்திய மகளிர் அணி தொடர்ந்து சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது.

தற்போது கிடைத்துள்ள இந்த தங்கப் பதக்கம், சர்வதேச அரங்கில் இந்திய பெண்களின் திறமையையும் ஆதிக்கத்தையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

=====================