World Cup dream shattered, Portuguese football legend Cristiano Ronaldo bid farewell in tears AI Generated
விளையாட்டு

FIFA 2026 : நிறைவேறாத உலகக்கோப்பை கனவு : ஸ்பெயினிடம் வீழ்ந்த பொர்ச்சுகல் : கண்ணீரோடு விடைபெற்றார் ரொனால்டோ...!

உலகக்கோப்பை கனவு தகர்ந்த நிலையில், கண்ணீரோடு விடைபெற்றார் போர்ச்சுகல் கால்பந்து ஜாம்பவான், கிறிஸ்டியானோ ரொனால்டோ.

Kannan

உலகக்கோப்பை கால்பந்து தொடர்

2026 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா , மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் மற்றும் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றுகள் முடிந்து தற்போது ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுகள் நடைபெற்று வருகின்றன.

ஸ்பெயின் – போர்ச்சுகல் மோதல்

ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் ஸ்பெயின் – போர்ச்சுகல் அணிகள் மோதின. போட்டி தொடங்கியது முதலே இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரமாக முயற்சித்தன. ஆனால் ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை

இதனையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இரு அணிகள் டிஃபென்ஸ் ஆடின. இதனால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் ஆழ்ந்தனர். 90 நிமிட முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்காமல் 0-0 என்று சம நிலையில் இருந்தது.

கூடுதல் நேரம் - ஸ்பெயின் கோல்

இந்த நிலையில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. முதலாவது நிமிடத்திலேயே அந்த அதிசயம் நிகழ்ந்தது. ஸ்பெயின் வீரர் மைக்கேல் மெரினோ ஒரு கோல் அடித்தார்.

காலிறுதியில் ஸ்பெயின்

இதனால் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

போர்ச்சுகல் கனவு தகர்ந்தது

இந்த போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் போர்ச்சுகல் அணி உலக கோப்பையில் இருந்து வெளியேறியது.

கண்ணீருடன் வெளியேறிய ரொனால்டோ

இதனால் உலகம் முழுவதும் அதிக ரசிகர்களைக் கொண்ட போர்ச்சுகல் வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோவுக்கு இது கடைசி சர்வதேச போட்டியாக அமைந்தது.

அவர் தனது கடைசி ஆட்டத்தில் கண்ணீருடன் வெளியேறினார். போர்ச்சுகல் அணிக்கு உலகக்கோப்பையை பெற்றுத் தந்து விட வேண்டும் என்ற ரொனால்டோவின் கனவு கடைசிவரை நிறைவேறவில்லை.

=========================