10 agreements have been signed, marking a new chapter in the friendship between India and Vietnam google
இந்தியா

இந்தியா - வியட்நாம் உறவில் புதிய பரிணாமம் : 10 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து! : UPI - FPS இணைந்து பரிவர்த்தனை...

இந்தியா - வியட்நாம் இடையே நட்புறவின் புதிய அத்தியாயமாக, 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

Kannan

இந்தியா - வியட்நாம் நல்லுறவு

India and Vietnam have elevated their ties to an Enhanced Comprehensive Strategic Partnership, targeting $25 billion in bilateral trade by 2030 : இந்தியா மற்றும் வியட்நாம் நாடுகளுக்கு இடையே பல சகாப்தங்களாக நட்புறவு நீடித்து வருகிறது. இரு நாடுகளிடையே வர்த்தகமும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

வியட்நாம் அதிபர் வருகை

இந்தநிலையில், வியட்நாம் அதிபர் டோ லாம் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துதார். பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேசினார்.

இருதரப்பு வர்த்தகம் அதிகரிப்பு

கடந்த பத்து ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் இரண்டு மடங்காக அதிகரித்து, தற்போது 16 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.

25 மில்லியன் டாலராக உயர்த்த இலக்கு

இந்த வர்த்தகத்தை 2030ம் ஆண்டுக்குள் 25 பில்லியன் டாலராக உயர்த்துவதே வியட்நாம் அதிபர் வருகையின் முக்கிய நோக்கம். அதன்படி இருநாடுகள் இடையே 10 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்திய மருந்து நிறுவனங்களுக்கு வியட்நாம் சந்தையில் மருந்துகளை விற்பனை செய்வதற்கான வழிவகை எளிதாக்கப்பட்டுள்ளது.

வேளாண்மை மற்றும் மீன்பிடித் துறைகளில் ஒத்துழைப்பு அதிகமாகும்.

இந்தியாவின் திராட்சை மற்றும் மாதுளை பழங்கள் வியட்நாமுக்கு ஏற்றுமதி

வியட்நாமின் புகழ்பெற்ற டுரியன் மற்றும் பொமலோ (Pomelo) பழங்கள் இந்தியச் சந்தைக்கு அதிக அளவில் வரவுள்ளன.

UPI - FPS இணைந்து பரிவர்த்தனை

தொழில்நுட்ப ரீதியாக, இந்தியாவின் UPI பணப்பரிவர்த்தனை முறை மற்றும் வியட்நாமின் அதிவேக பணப்பரிவர்த்தனை அமைப்பு (Fast Payment System) ஆகியவற்றை இணைக்க இரு நாடுகளின் மத்திய வங்கிகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிகர்களுக்குப் இது பெரிய உதவியாக இருக்கும்.

இந்தியா-ஆசியான் வர்த்தக ஒப்பந்தமான 'ஐடிகா' (AITIGA) இந்த ஆண்டு இறுதிக்குள் புதுப்பிக்கப்படும்.

====================