10 Month Old Infant Alin Sherin Abraham was declared brain organ donor, giving hope to others in Kerala youngest donor  Source : Google
இந்தியா

உறுப்பு தானம் செய்த குழந்தை : அரசு மரியாதையுடன் பிரியாவிடை

10 Month Old Alin Sherin Abraham Kerala's Youngest Organ Donor : கேரளாவில் மூளைச்சாவு அடைந்த குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடடகம் செய்யப்பட்டது

Rohini

விபத்தில் சிக்கிய குழந்தை

10 Month Old Alin Sherin Abraham Kerala's Youngest Organ Donor : கேரளாவின் பத்தனம் திட்டாவைச் சேர்ந்த 10 மாத பெண் குழந்தை அலின்ஷெரின் ஆபிரஹாம். கடந்த 5ம் தேதி, குழந்தையின் தாய், தாத்தா, பாட்டி ஆகியோர் கோட்டயத்தில் இருந்து திருவல்லாவுக்கு காரில் சென்ற பொது எதிர்பாராத விபத்தில் சிக்கிய நிலையில் குழந்தைக்கு மட்டும் அதிக பாதிப்பு ஏற்பட்டு மூளை சாவு ஏற்பட்டது .

உடல் உறுப்பு தானம்

குழந்தைக்கு மூளைச்சாவு ஏற்பட்டதை அடுத்து குழந்தையின் கல்லீரல், இரு சிறுநீரகங்கள், இதய வால்வு, இரு கண்கள் ஆகியவை தானமாக வழங்கப்பட்டன.

இளம் வயதில் உறுப்புதானம்

இந்த நிலையில் மிக இளம்வயதிலேயே உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய பெருமையை ஷெரின் அடைந்தார்.

பொதுமக்கள் அஞ்சலி

குழந்தை மூளை சாவால் பாதிக்கப்பட்ட குழந்தையின் உடலானது அவரது மலப்பள்ளியில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் கேரள அமைச்சர்கள் உடல் உறுப்பை தானமாக பெற்றவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் இறுதிசடங்கில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

வழி நெடுக்கிலும் கேரள மக்களின் இறுதி அஞ்சலி

நெடுங்கடப்பள்ளியில் உள்ள தேவாலயத்துக்கு குழந்தையின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் வழிநெடுகிலும் குழந்தையின் உடலுக்கு கேரள மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

சிறப்பு பிரார்த்தனையைத் தொடர்ந்து, குழந்தையின் உடல் தேவாலயத்தை ஒட்டிய கல்லறையில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இறுதி சடங்கில், மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் உள்ளிட்டோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது .