₹1,000 will be provided to female college students in Kerala," announced Higher Education Minister Roji M. John.  google
இந்தியா

”கேரளாவில் கல்லூரி மாணவிகளுக்கு உதவித்தொகை ரூ1000 வழங்கப்படும் ” உயர் கல்வி துறை அமைச்சர் ரோஜி எம்.ஜான் அறிவிப்பு..!

தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளாவிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ 1000 வழங்கப்படும் என அம்மாநிலத்தின் உயர் கல்வி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்

Rohini

புதிய ஆட்சியில் கேரளம்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கேரளத்தில் பினராயி விஜயனை பின்னுக்கு தள்ளி UDF ஆட்சியை கைப்பற்றியது , முதல்வராக சதீஷன் பதவியேற்றுக்கொண்டார் , தமிழ்நாட்டை போலவே கேரளவிலும் ,

இலவச பேருந்து பயணம் , மாணவிகளுக்கு உதவித்தொகை , பணியாளர்களுக்கு ஊதிஅய் உயர்வு போன்ற சில முக்கிய அறிவிப்புகளை தேர்தல் அறிக்கையாக அறிவித்திருந்தது

தேர்தல் அறிக்கையை நிறைவேற்றிய ஆளும் அரசு

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் சொன்னப்படியே தற்போது நிறைவேற்றியுள்ளது. குறிப்பாக கடந்த வாரங்களுக்கு முன்பு மகளிருக்கு அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று அராசணையை வெளியிட்டுள்ளது

கல்லூரி மாணவிகளுக்கு இலவச உதவித்தொகை

இநத் நிலையில் இலவச பேருந்து பயணத்தை தொடர்ந்து ,கல்லூரி மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் திட்டம் நடப்பு கல்வியாண்டில் செயல்படுத்தப்படும் என உயர்கல்வி அமைச்சர் ரோஜி எம்.ஜான் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த திமுக ஆட்சியில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டிருந்தது இதைபோலவே கேரளாவிலும் இந்த ஆண்டிற்குள் திட்டம் செயல்படுத்தப்டும் என்று தெரிவித்துள்ளது

வயதானவர்களுக்காக தனி துறை

இரண்டாவது திட்டமாக .வயதானவர்களுக்காக தனி துறையை நாங்கள் உருவாக்கப் போகிறோம் என்று தெரிவித்துள்ளார் .இந்தியாவில் இது முதலாவதாக இருக்கும்.

வயதானவர்கள் எவ்வாறு பராமரிக்கப்படுகிறார்கள் என்பதுதான் ஒரு நாகரிக சமூகத்தின் முக்கிய அளவுகோல் என்றும் இதை கருத்தில் கொண்டு ஒரு சிறந்த நாகரிக சமூகமாக கேரளாவை மாற்ற நாங்கள் கனவு காண்கிறோம்.

வயதானவர்களின் நலன்களை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை நாங்கள் கொண்டு வர உள்ளோம். இதற்காக தனி துறையை நாங்கள் ஏற்படுத்த இருக்கிறோம் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தார்

ஆஷா ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

கடந்த ஆட்சிக் காலத்தில் ஊதிய உயர்வு கோரி ஆஷா பணியாளர்கள் நீண்டகாலமாக போராடினார்கள். அப்போது நாங்கள், அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக வாக்குறுதி அளித்திருந்தது

அதன்படி, தற்போது அவர்களுக்கான மாத ஊதியத்தில் ரூ.3,000 உயர்த்தப்படுள்ளது ,மேலும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.1,000, பள்ளிகளில் சமையல் பணியாளர்களுக்கு ரூ.1,000, ப்ரீ-ஸ்கூல் ஆசிரியர்களுக்கு ரூ.1,000, ஆயாக்களுக்கு ரூ.1,000 மாத ஊதியம் வழங்கப்படும் என்று உறுதி அளித்திருந்தது .

==================