118th Pasumpon Muthuramalinga Thevar Guru Poojai 2025 Celebrations PM Modi MK Stalin EPS Seeman TVK Vijay Tribute Devar Jayanthi News in Tamil PM Narendran Modi Tribute Pasumpon Muthuramalinga Thevar Jayanthi 2025
இந்தியா

118வது தேவர் ஜெயந்தி விழா- பிரதமர் மோடி, கட்சி தலைவர்கள் மரியாதை!

Thevar Guru Poojai 2025 : முத்துராமலிங்க தேவர் அவர்களின் 118 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, பசும்பொன்னில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Bala Murugan

தேவர் ஜெயந்தி விழா 2025 :

Pasumpon Muthuramalinga Thevar Guru Poojai 2025 : ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் தெய்வீக திருமகனார் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து, பசும்பொன்னில் இன்று தேவர் ஜெயந்தி விழா, குருபூஜை அரசு விழாவாக நடைபெற்று வருகிறது.

தலைவர்கள் மரியாதை

தேவர் ஜெயந்தியை(Thevar Jayanthi 2025) முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதல்லவர் மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன், சீமான், வைகோ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் மரியாதை செலுத்தினர்.

பிரதமர் மோடியின் எக்ஸ் அஞ்சலி

இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடிதேவர் ஜெயந்தி விழாவை(PM Modi Tribute Thevar Jayanthi 2025) முன்னிட்டு தனது எக்ஸ் பக்கத்தில் மரியாதை செலுத்தியுள்ளார். அதில், இந்தியாவின் சமூக மற்றும் அரசியல் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய மாபெரும் ஆளுமையான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களுக்குப் புனிதமான குரு பூஜையின் போது மனமார்ந்த அஞ்சலி செலுத்துகிறேன்.

நீதி, சமத்துவம் ஆகியவற்றுக்கும் ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நலனுக்கும் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது.கண்ணியம், ஒற்றுமை மற்றும் சுயமரியாதையின் பக்கம் உறுதியாக நின்ற அவர், சமூக சேவை செய்வதற்குக் கொண்டிருந்த அசைக்க முடியாத உறுதியுடன் ஆழ்ந்த ஆன்மீகத்தை இணைத்தார் என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க : தேவர் ஜெயந்தி, குருபூஜை : பசும்பொன்னில் துணை ஜனாதிபதி CPR மரியாதை

தவெக தலைவர் விஜய் மரியாதை

இதைப்போல், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பனையூரில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் முத்துராமலிங்கத் தேவரின் உருவப் படத்திற்கு(TVK Vijay on Thevar Jayanthi 2025) மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். பின்னர், இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர், ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகத் தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர், அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்த அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் குரு பூஜை தினத்தில், எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.