100 நாள் வேலைத்திட்டம்
Viksit Bharat - Guarantee for Rozgar and Aajeevika Mission (Gramin), often abbreviated as the VB-G RAM G Act : நாடு முழுவதும் கிராமப்புற வேலைவாய்ப்பை உறுதி செய்யும் நோக்கத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் அதாவது 100 நாள் வேலைத்திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தி வந்தது.
விபி ஜி ராம் ஜி திட்டம்
காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டத்தில் சில மாற்றங்களை மத்திய பாஜக அரசு கொண்டு வந்தது. அதன்படி, 100 நாள் வேலை உறுதி என்பது 125 நாட்களாக உயர்த்தப்பட்டது.
பெயர் மாற்றம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம், விபி ஜி ராம்ஜி சட்டம் எனும் வளர்ச்சியடைந்த இந்தியா, வேலைவாய்ப்பு உறுதியளிப்பு மற்றும் வாழ்வாதார இயக்கம் என அளவில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
125 நாட்களுக்கு வேலை
இந்த திட்டத்துக்கு மாற்றாக 'விபி-ஜி ராம் ஜி' என்ற புதிய திட்டத்தை கொண்டு வந்து இருக்கிறது. இதன்மூலம் 125 நாள் வேலை கிடைக்கும்.
நாடு முழுவதும் அமல்
இந்த திட்டம் நாடு முழுவதும் இன்று (புதன்கிழமை) அமலுக்கு வருகிறது. தமிழகத்தின் அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் 'வளர்ச்சியடைந்த பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம்' என்ற பெயரில் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்திலும் அமலுக்கு வந்தது
இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், 125 நாட்களாக உயர்வு இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புற குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வந்த வேலை உத்தரவாதம் 100 நாட்களில் இருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டு உள்ளது.
125 நாட்கள் வேலை, முக்கிய அம்சங்கள்
* வேலை கேட்டு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு 15 நாட்களுக்குள் வேலையும், சம்பளமும் வழங்கப்பட வேண்டும்.
* வேலை வழங்காவிட்டால், வேலையிழப்பு உதவித் தொகை வழங்கப்படும்.
* முதல் 30 நாட்களுக்கு அறிவிக்கப்பட்ட தினக்கூலியின் குறைந்தபட்சம் நான்கில் ஒரு பங்கும், அதன்பிறகு அறிவிக்கப்பட்ட கூலியின் குறைந்தபட்சம் பாதியும் வேலை இழப்பு உதவித்தொகையாக வழங்கப்படும்.
* மத்திய அரசின் நிதியுதவியில் செயல்படுத்தப்படும் திட்டமான இதில் 60 சதவிகித நிதியை மத்திய அரசும், 40 சதவிகித நிதியை மாநில அரசும் வழங்கும்
* வேலை ஒதுக்கீட்டில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். பதிவு செய்து வேலை கோரியவர்களில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் பயனாளிகளாக இருக்க வேண்டும்.
* வேலை, முடிந்தவரை விண்ணப்பதாரர் வசிக்கும் கிராமத்திலிருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் வழங்கப்பட வேண்டும்.
அதற்கு வெளியே வேலை வழங்கப்பட்டால், போக்குவரத்து மற்றும் வாழ்வாதாரச் செலவுகளுக்காக கூலியுடன் கூடுதலாக 10 சதவீதம் வழங்கப்படும்.
================