PM Narendra Modi Issue Appointment Letters 2025 : பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஜூலை 12ஆம் தேதி) காலை 11 மணியளவில் காணொலி மூலமாக 51 ஆயிரத்துக்கும் அதிகமான பணிநியமன ஆணைகளை வழங்க உள்ளார் என மத்திய அரசின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது . இந்த 16 வது மெகா வேலைவாய்ப்பு முகாமில் அவர் சிறப்புரையும் ஆற்ற உள்ளார்.
மத்திய அரசின் வேலைவாய்ப்பு உருவாக்க வாக்குறுதியின் ஒரு பகுதியாக ‘வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதன்மூலமாக நாட்டின் இளைஞர்களுக்கு பயனுள்ள வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவதோடு, நாட்டின் மேம்பாட்டில் பங்கு பெறும் வாய்ப்பும் உருவாக்கப்படுகிறது என்று அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
மேலும் இதுவரை நாடு முழுவதும் நடத்தப்பட்ட முகாம்களில் 10 இலட்சத்திற்கு மேற்பட்ட பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. 16வது முகாம்(16th Rozgar Mela 2025) நாட்டின் 47 இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெறவுள்ளது.
ரயில்வே, உள்துறை, தபால் துறை, சுகாதாரத்துறை, நிதிசேவை துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய நியமனங்கள் நடைபெற உள்ளன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.