20 TMC MPs expressed support for BJP government at center is seen as a major setback for Mamata Banerjee google
இந்தியா

” TMC MPக்கள் 20 பேர் NDAவுக்கு ஆதரவு” : மம்தாவுக்கு பெரிய பின்னடைவு : வீழ்த்தப்படும் திரிணாமூல் கோட்டை...!

திரிணாமூல் காங்கிரஸ் எம்பிக்கள் 20 பேர் மத்திய பாஜக அரசுக்கு ஆதரவு தெரிவித்து இருப்பது, மம்தா பானர்ஜிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Kannan

திரிணாமூல் காங்கிரஸ் படுதோல்வி

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் தோல்வி, திரிணாமூல் காங்கிரசை புரட்டி போட்டு இருக்கிறது. 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மம்தாவால் இந்தமுறை 80 இடங்களில் மட்டுமே வெற்றியை ஈட்ட முயன்றது.

தனி அணியாக திரிணாமூல்

தேர்தல் தோல்விக்கு பிறகு, திரிணாமூல் காங்கிரசில் உட்கட்சி மோதல் வெடித்தது. 60 எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்பட தொடங்க, அவர்களில் ஒருவர் எதிர்க்கட்சி தலைவரானார்.

பின்னடைவை சந்தித்து வரும் மம்தா பானர்ஜிக்கு, இப்போது திரிணாமூல் எம்பிக்கள் தலைவலியாக உருவெடுத்து இருக்கிறார்கள்.

20 எம்பிக்கள் மத்திய அரசுக்கு ஆதரவு

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ககோலி கோஷ் தஸ்திதார், தன்னுடன் சுமார் 19 எம்பிக்கள் உள்ளதாக கூறி, மேற்கு வங்க NDA-க்கு ஆதரவு தருவதாக அறிவித்து இருக்கிறார்.

மூத்த தலைவர்கள் குற்றச்சாட்டு

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீது அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களே பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். கட்சிப் பதவிகளில் இருந்தும் விலகி வருகின்றனர்.

இதனால், திரிணாமுல் காங்கிரஸுக்குள் உட்கட்சிப் பூசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இண்டியா கூட்டணி கூட்டத்தில் மம்தா நேற்று கலந்து கொண்ட நிலையில், திரிணாமூல் எம்பிக்கள் 20 பேர், மத்திய அமைச்சரும் மேற்கு வங்க பாஜக தலைவருமான பூபேந்தர் யாதவுடன் ஆலோசனை நடத்தினர்.

கட்சி மீது குற்றச்சாட்டு

அதன்பிறகு, மத்திய பாஜக அரசை ஆதரிப்பது என்று அவர்கள் முடிவு எடுத்து இருக்கிறார்கள். கட்சிக்குள் ஊழல், அராஜகம் நடப்பதாக அவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார்கள்.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதி, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு முறையாக ஆதரவளிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்று ககோலி கோஷ் கூறியுள்ளார்.

இதனால், மம்தா பானர்ஜிக்கு அரசியலில் அடிமேல் அடி விழுந்து வருகிறது. இது நீடித்தால், அவரால் கட்சியை நடத்த முடியாத சூழலும் உருவாகி, அரசியலில் எழ முடியாத இடத்திற்கு தள்ளப்படுவார்.

==================