24-hour cleaning service on trains from now on India Railway Minister Ashwini Vaishnaw confirms google
இந்தியா

இனி ரயில்களில் 24 மணிநேர தூய்மைப்பணி : அஸ்வினி வைஷ்ணவ் உறுதி

Railway Minister Ashwini Vaishnaw on Train Cleaning Work : இனி ரயில்களில் 24 மணிநேரமும் தூய்மைப்பணி மேற்கொள்ளப்படும் என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Rohini

முதற்கட்டமாக 80 நீண்ட தூர ரயில்கள் தேர்வு

Railway Minister Ashwini Vaishnaw on Train Cleaning Work : நீண்ட தூர ரயில்களில் பயணம் செய்யும் போது ஏற்படும் கழிப்பறைகள் சுகாதார பிரச்சினை தொடர்ச்சியான ஒன்றாக இருந்து வருகிறது.

இந்த சிக்கலை போக்கும் விதமாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதன்படி 24 மணிநேரமும் ரயில்களில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்படும் கூறியுள்ளார்.

தொடர்ச்சியாக தூய்மைப்பணி

நீண்ட தூர ரயில்களில் பயணிகளின் வசதியை மேம்படுத்த, அனைத்து பெட்டிகளிலும் தொடர்ச்சியான தூய்மைப் பணியை மேற்கொள்ள சிறப்பு தனியார் நிபுணர் குழுக்கள் நியமிக்கப்படும் எனவும் முதற்கட்டமாக 80 நீண்ட தூர ரயில்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்

முறையான மேற்கொள்ள நடவடிக்கை

மேலும் படிக்க :164 வந்தே பாரத் ரயில்கள் சேவையாற்றுகின்றன : அஸ்வினி வைஷ்ணவ்!

நீண்ட தூர ரயில்களில் கழிப்பறைகள், பயணிகள் உள்புறம் மற்றும் குப்பை சேகரிப்பு போன்ற அனைத்தையும் பயணத் தூரத்தில் முறையாக அழுக்குச் சுத்தம் செய்யும் புதிய tech-enabled cleaning teams முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ,இவற்றை போலவே பொது கோச்சுகளும் (General coaches) கூட அடிக்கடி சுத்தம் செய்யப்படும் நெறிமுறைக்கு உட்படுத்தப்பம் என்றும் தெரிவித்துள்ளார் .

தேவைக்கேற்ப சுத்தம் செய்யும் முறை

தற்போது நடைமுறையில் இருக்கும் ரயில் தூய்மை திட்டத்தின் கீழ், அதன் வழித்தடத்தில் உள்ள நிா்ணயிக்கப்பட்ட ரயில் நிலையத்தில் மட்டுமே ரயில் பெட்டிகள் தூய்மை செய்யப்படும்.

ஆனால், புதிய திட்டத்தின்படி ரயில் பயணம் முழுவதும் குறிப்பிட்ட நேர இடைவெளியில் அல்லது தேவைப்படும்போதெல்லாம் ரயில்களில் இதற்காகவே நியமிக்கப்பட்ட பணியாளா்கள் தூய்மைப் பணியை மேற்கொள்வர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது .

அத்யாவசிய சுகாதாரப்பணிக்கான நடவடிக்கை

மேலும் படிக்க : ரயில்வே திட்டங்கள் தாமதம்?: CM ஸ்டாலினுக்கு அஸ்வினி வைஷ்ணவ் பதிலடி

பயணிகள் பயணிக்கும்போது தேவைப்படும் அத்யாவசிய சுகாதார தேவைக்கான அனைத்து முறையும் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

குறிப்பாக கழிவறைகள், கை கழுவும் கோப்பை, குப்பைகள் சேகரிப்பு, சிறு சிறு கோளாறுகளை சரிசெய்தல், ரயில்களில் தண்ணீா் நிரப்புதல் பிற தேவைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது .

தேவையை பொறுத்து தேவையை அதிகரிக்கலாம்

அதிகரித்து வரும் ரயில் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், தெற்கு ரயில்வே 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் சென்னை மற்றும் கோயம்புத்தூரிலும், கேரளாவின் எர்ணாகுளத்திலும் ரயில் திறனை இரட்டிப்பாக்கும் என்றும் அமைச்சர் அறிவிப்பு கூறுகிறது.

விரைவான பயண விரிவாக்கம்

ரயில் சேவைகள் அதிகரிப்பு வரிசையில் ராமேஸ்வரம் - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் வாரத்தில் 3 நாட்களில் இருந்து 4 நாட்களாக அதிகரிக்கபடுவதாகவும் .

மேலும், 2026-க்குள் 52 வாரங்களில் 52 சீர்திருத்தங்கள் கொண்ட திட்டத்தின் கீழ், நீண்ட தூர இரவு பயணங்களுக்கு மேம்பட்ட படுக்கை வசதி மற்றும் நவீன வசதிகள் கூடிய வந்தே பாரத் ரயில்கள் (Vande Bharat Sleeper)அறிமுகம் படுத்தப்போவதாகவும் அறிவிப்பு குறிப்பிட்டுள்ளது

சாதாரண மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் அதிர்வு குறைவு, பாதுகாப்பு அதிகரிப்பு புதிய LHB கோச்சுகள் மற்றும் மேம்பட்ட சேவையுடன் பல புதிய Amrit Bharat Express ரயில்களும் களமிறங்க உள்ளது.

ரயில் வேகம் & பாதையில் புதிய மாற்றம்

110–130 kmph வேகத்துக்கு track strengthening முழு மின்மயமாக்கல் (Electrification)மற்றும் புதிய சரக்கு ரயில்களுக்கென (Dedicated Freight Corridors)தனி ஓடும் பாதைகள் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் அறிவிப்பு கூறியுள்ளது .

'