24 Speed ​​Post Premium Scheme is a new service of India Post Department from Today Onwards google
இந்தியா

”24 ஸ்பீட் போஸ்ட் பிரீமியம் திட்டம்” : இந்திய அஞ்சல்துறை அறிமுகம் : தனியார் நிறுவனங்களுடன் போட்டி

India Post has Launched Premium 24 Speed Post : தனியார் கூரியர் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களுக்கு நிகராக இந்திய அஞ்சல் துறையில் 24 ஸ்பீட் போஸ்ட் பிரீமியம் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

Rohini

புதிய பிரீமிய சேவை

India Post has Launched Premium 24 Speed Post : தனியார் கூரியர் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களுடன் போட்டிபோடும் அளவிற்கு இந்திய அஞ்சல் துறை புதிய சேவைகளை தொடங்கியுள்ளது.

பிரீமியம் சேவை: இந்திய அஞ்சல் துறை அறிமுகம்

ஆவணங்கள் மற்றும் பார்சல்களை விரைவாக வழங்குவதற்காக,24 ஸ்பீட் போஸ்ட், 48 ஸ்பீட் போஸ்ட், மற்றும் ,24 ஸ்பீட் போஸ்ட் பார்சல்போன்ற புதிய பிரீமியம் சேவைகளை இந்திய அஞ்சல் துறை அறிமுகப்டுத்தியிருக்கிறது.

சேவையின் தொடக்கம்

இந்திய அஞ்சல் துறையின் அனைத்து புதிய பிரீமியம் சேவைகளும் மார்ச் 17, 2026 முதல் பயனர்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

முதற்கட்ட சேவை

இந்திய அஞ்சல் துறையின் இந்த புதிய சேவையானது முதற்கட்டமாக ஆறு முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் இடையே தொடங்கப்படும் என்றும் .

அடுத்தடுத்த கட்டங்களில், இந்த வசதி மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது

வெவ்வேறு வகையில் சேவை அறிமுகம்

24 வேக அஞ்சல் முன்பதிவு செய்த நாளிலிருந்து அடுத்த நாளே ஆவணங்கள் போர்டுகளை சேருமிட நகரத்திற்கு வழங்கப்படும்.

48 வேக அஞ்சல் இதன் கீழ், இரண்டு வேலை நாட்களுக்குள் ஆவணங்களின் விநியோகம் உறுதி செய்யப்படும் துன்று தெரிவித்துள்ளது

24 வேக அஞ்சல் பார்சல்கள்: . இந்த பார்சல்கள் முதன்மையாக விமானம் மூலம் அனுப்பப்படும் என்று தேவையை பொறுத்து போக்குவரத்தின் மூலம் அனுப்பும் என்றும் தெரிவித்துள்ளது.

எடை மற்றும் கட்டண விதிமுறைகள்

இந்திய அஞ்சல் துரையின் இந்த புதிய சேவையின் எடை மற்றும் கட்டண விதிமுறைகளையும் இந்திய அஞ்சல் துறை குறிப்பிட்டுள்ளது.

புதிய பார்சல் சேவையானது 5 கிலோகிராம் வரையிலான சரக்குகளுக்குக் கிடைக்கும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு இந்த சேவையானது கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது.