3rd Chief of Defence Staff Selection Commission; General Raja Subramani from Tamil Nadu takes oath  google
இந்தியா

முப்​படை தலைமை தளப​தி:​ தமிழகத்தை சேர்ந்த ஜெனரல் ராஜா சுப்பிரமணி பதவியேற்பு : கடற்​படை தளப​தியானார் கிருஷ்ண சுவாமி!

முப்​படை தலைமை தளப​தி​யாக இருந்த ஜெனரல் அனில் சவு​கானின் பதவிக்​காலம் நேற்று முன்​தினம் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது

Rohini

புதிய முப்​படை தளபதி பதவியேற்பு

முப்​படை தலைமை தளப​தி​யாக இருந்த ஜெனரல் அனில் சவு​கானின் பதவிக்​காலம் நேற்று முன்​தினம் நிறைவடைந்தது. இதையடுத்து நாட்​டின் 3-வது முப்​படை தலைமை தளப​தி​யாக தமிழகத்​தைச் சேர்ந்த ஜெனரல் ராஜா சுப்பிரமணி பதவியேற்றுக்கொண்டார்

யார் இந்த ராஜா சுப்பிரமணி ?

இவர் தேசிய பாது​காப்பு அகாடமி மற்​றும் இந்​திய ராணுவ அகாடமி​யில் பயிற்​சியை முடித்து கடந்த 1985-ம் ஆண்டு இந்​திய ராணுவத்​தின் கர்​வால் ரைபிள்ஸ் படைப்​பிரி​வில் அதி​காரி​யாக சேர்ந்​தார்.

பல பிரிவு​களில் தலைமை அதி​காரி​யாக பணியாற்றிய​வர். ராணுவத் துணை தளப​தி​யாக பணி​யாற்​றிய இவர் கடந்த ஆண்டு ஜூலை 31-ம் தேதி ஓய்வு பெற்​ற நிலையில் முப்​படை தளபதியாக பதிவியேற்றுக்கொண்டுள்ளார்

ராணுவ ஆலோசகராகவும் பணிபுரிந்தவர்

புதிதாக பதவியேற்றுள்ள தலமை முப்படை தளபதி ,பாகிஸ்​தான் மற்​றும் சீனா நில​வரங்​களை இவர் நன்கு அறிந்​தமையால் தேசிய பாது​காப்பு கவுன்​சில் தலைமை செயல​கத்​தில் ராணுவ ஆலோ​சக​ராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

கடற்படை தளபதியாக அட்மிரல் கிருஷ்ண சுவாமி ​நாதன் பொறுப்பேற்பு

இந்​திய கடற்​படை தளப​தி​யாக இருந்த அட்​மிரல் தினேஷ் குமார் திரி​பாதி ஓய்வு பெற்றதையடுத்து, நாட்​டின் 27-வது கடற்​படை தளப​தி​யாக அட்மிரல் கிருஷ்ண சுவாமி ​நாதனும் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்

இவரின் பின்ணணி

புதிதாக பொறுப்பேற்றுள்ள கடற்படை தளபதி ,கடற்​படை​யில் கடந்த 1987-ம் ஆண்டு சேர்ந்​தார்.குறிப்பாக இவர் கடற்​படை​யில் சிறந்த பணிக்​காக பரம் விசிஷ்ட் சேவா, அதி விசிஷ்ட் சேவா மற்றும்​ விசிஷ்ட்​ சேவா பதக்​கங்​களை இவர்​ வென்​றுள்​ளது குறிப்பிடத்தக்கது