3rd nuclear submarine INS Aridaman inducted into Indian Navy  google
இந்தியா

INS Aridhaman : 3வது அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் "ஐஎன்எஸ் அரிதாமன்" : இந்திய கடற்படையில் சேர்ப்பு!

உள்​நாட்​டில் தயாரிக்​கப்​பட்ட ஐஎன்எஸ் அரிதாமன் என்ற நீர்மூழ்கி கப்பல் ,இந்திய கடற்படை​யில் இணைக்​கப்​பட்​டது. இந்திய கடற்படையில் இணைக்கப்ட்ட 3-வது அணுசக்தி நீர்​மூழ்கி கப்​பலாகும்

Rohini

இந்திய கடற்படைக்கு அர்ப்பணிப்பு

உள்​நாட்​டில் தயாரிக்​கப்​பட்ட 3-வது அணுசக்தி நீர்​மூழ்கி கப்​பல் ஐஎன்எஸ் அரிதாமன் என்ற நீர்முழ்கி கப்பல் இந்திய கடற்படை​யில் இணைக்​கப்​பட்​டது.

ஆந்​திர மாநிலம் விசாகப்​பட்​டினத்​தில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் ஐஎன்எஸ் அரி​தாமன் என்ற நீர்​மூழ்கி கப்​பலும் அதனுடன் ,ஐஎன்​எஸ் தாராகிரி போர்க் கப்​பலும் இந்திய கடற்​படை​யில் இணைக்கப்பட்டது

அரி​தாமன் நீர்முழ்கி கப்பல் : சிறப்பு

இந்த அரி​தாமன் நீர்​மூழ்கி கப்​பல் 7,000 டன் எடை​யில் தயாரிக்​கப்​பட்​டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அணு ஆயுதம் மூலம் தாக்​குதல் நடத்​தும் இந்த நீர்​மூழ்கி கப்​பலில் 90 சதவீதம் உள்​நாட்டு தொழில்​நுட்பம் சார்ந்த அனைத்தும் பயன்​படுத்​தப்​பட்​டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

2 மடங்கு சக்தி வாய்ந்த கப்பல்

இந்திய கடற்படையில் அர்ப்பணிக்கப்பட்ட இந்த கப்பல் தண்​ணீருக்​குள் மணிக்கு 45 கிலோ மீட்​டர் வேகத்​தில் செல்லும் திறன் கொண்டதாக இது உள்ளது .

இந்​திய கடற்​படை​யில் உள்ள ஐஎன்​எஸ் அரிஹன்ட் மற்​றும் ஐஎன்​எஸ் அரி​கட் நீர்​மூழ்கி கப்​பல்​களை விட, இந்த கப்​பல் 2 மடங்கு சக்தி வாய்ந்​தது.

இதில் ஏவு​கணை​கள் ஏவுவதற்கு 8 ட்யூப்​கள் சிறப்பும் இடம் பெற்றுள்ளது

1,500 கிலோ மீட்​டர் இலக்குகளை தாக்கும் திறன் பெற்றது

இந்த நீர்முழ்கி கப்பலில் உள்ள அணு ஏவு​கணை கடலுக்​கடியி​லிருந்து வான் மற்​றும் தரை இலக்​கு​களை தாக்கி அழிக்கும் திறன் படைத்​தது.

அரி​தாமன் கப்​பலில் 24, ‘சகாரிகா கே-15’ ஏவு​கணை​கள் உள்​ளன. இந்த நீர்முழ்கி கப்பல் 750 கிலோ மீட்​டர் முதல் 1,500 கிலோ மீட்​டர் இலக்​கு​களை தாக்​கும்.