60 Trinamool MLAs boycotting meeting convened by Mamata Banerjee created stir in West Bengal politics google
இந்தியா

"boycott" செய்த 60 TMC எம்எல்ஏக்கள் : அதிர்ச்சியில் மம்தா : கரைக்கப்படுகிறதா கட்சி? பின்னணியில் இவர்கள்...?

மம்தா பானர்ஜி கூட்டிய கூட்டத்தை, திரிணாமூல் எம்எல்ஏக்கள் 60 பேர் புறக்கணித்து இருப்பது மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

Kannan

இரும்பு பெண்மணி மம்தா

மேற்கு வங்க முதல்வராக மூன்று முறை கோலோச்சியவர் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி. அவரது இரும்பு கோட்டையை யாரும் அசைக்க முடியாத என்ற தம்பிக்கையை பாஜக தகர்த்தது.

இதற்கு முன்பு மம்தா எதிர்த்த இடதுசாரிகளும், காங்கிரசும் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து, ஓரிரு இடங்களில் வெற்றி என்பதே கேள்விக்குறியாகி நிற்கிறது.

சட்டமன்ற தேர்தல் என்றாலும், மக்களவை தேர்தல் என்றாலும், மேற்கு வங்கத்தில் மம்தாவின் கொடி தான் பறக்கும். எனவே, தேசிய அரசியலிலும் அவருக்கு முக்கியத்துவம் அதிகம்.

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி

கடந்த சட்டமன்ற தேர்தலில் 70க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி, வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்த பாஜக இந்தமுறை ஆட்சியை பிடித்து விட்டது. பாஜக வரலாற்றில் இது முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.

எதிர்க்கட்சியான திரிணாமூல்

திரிண​மூல் காங்​கிரஸுக்கு 80 இடங்​கள் மட்​டுமே கிடைத்​தன. இந்த சூழலில் திரிண​மூல் எம்பிக்கள் அபிஷேக் பானர்​ஜி, கல்​யாண் பானர்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்​பாக விவாதிக்க கட்சி எம்​எல்​ஏக்​கள் கூட்டத்துக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்​தார்.

எம்எல்ஏக்கள் கூட்டம் 60 பேர் பாய்காட்

கொல்​கத்​தா​வில் உள்ள மம்​தா​வின் வீட்​டில் எம்​எல்​ஏக்​கள் கூட்​டம் நடை​பெற்​றது. மொத்தமுள்ள 80 திரிண​மூல் எம்​எல்​ஏக்​களில் 60 எம்​எல்​ஏக்​கள் கூட்​டத்​தில் பங்​கேற்​க​வில்​லை.

கூட்டம் ஒத்திவைப்பு

மம்தா உட்பட 20 பேர் மட்​டுமே கூட்​டத்​தில் கலந்து கொண்​டனர். இதைத் தொடர்ந்து கூட்​டம் ஒத்திவைக்கப்படு​வ​தாக மம்தா தெரி​வித்​தார்.

தேர்தலுக்கு பிறகு நடந்த வன்முறைகளை கண்டித்து திரிணாமூல் நடத்திய ஆர்ப்பாட்டத்திலும், மொத்தம் உள்ள 80 எம்எல்ஏக்களில் 35 பேர் கலந்து கொண்டனர்.

திரிணாமூல் காங்கிரசில் விரக்தி

தேர்தல் தோல்விக்கு பிறகு திரிணாமூல் காங்கிரசில் விரக்தி தலைதூக்கி வருகிறது. முக்கிய தலைவர்கள் பாஜகவிற்கு தாவி வருகிறார்கள். சிலர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.

பாஜகவின் புதிய முதல்​வர் சுவேந்து அதி​காரிக்கு திரிணாமூல் எம்​எல்​ஏக்​கள் பகிரங்​க​மாகவே ஆதரவு தெரி​வித்து இருப்பது முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

மம்தாவுக்கு பெரும் பின்னடைவு

இந்தச்சூழலில் மம்தா தலை​மை​யில் நடை​பெற்ற கூட்​டத்தை 60 எம்எல்ஏக்​கள் புறக்​கணித்​திருப்​பது திரிண​மூல் கட்​சிக்கு பெரும் பின்னடை​வாக பார்க்கப்படுகிறது.

திரிண​மூல் காங்​கிரசுக்கு 28 மக்​களவை எம்​பிக்​கள், 13 மாநிலங்​களவை எம்​பிக்​கள் உள்​ளனர். இதில் 20 எம்​பிக்​கள் பாஜக​வுடன் தொடர்​பில் இருக்கிறார்கள். எந்த நேரமும் அவர்கள் கட்சி தாவலாம், அல்லது தனி அணியாக செயல்படலாம்.

திரிணாமுல் காங்கிரசை கரைக்கும் பாஜக

பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்து வரும் மம்தாவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவரது கட்சியை பாஜக மெல்ல மெல்ல கரைத்து வருவதாக விமர்சனம் எழுந்துள்ளது. இதனிடையே போலி கையெழுத்து விவகாரத்தில் இரண்டு எம்எல்ஏக்கள கட்சியில் இருந்து நீக்கி இருக்கிறார் மம்தா.

====================