7 killed as wall collapses in Bengaluru due to heavy rains: PM Modi, CM Siddaramaiah express condolences  google
இந்தியா

கனமழையால் பெங்களூருவில் சுவர் இடிந்து விழுந்து 7 பேர் உயிரிழப்பு: பிரதமர் மோடி,முதல்வர் சித்தராமையா, இரங்கல்

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நிவாரண தொகையும் அறிவித்துள்ளார்

Rohini

தீடிரென்று ஏற்பட்ட கனமழை

பெங்களூருவில் கடந்த இரு மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் பலத்த இடி மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் சாலைகளிலும் ஐடி நிறுவனங்களிலும் சாலைகளில் பனிமழை பெய்தது போன்று காட்சியளித்தது.

7 மணி வரை கொட்டிய மழை

குறிப்பாக சிவாஜி நகர், கம்மனஹள்ளி, கிருஷ்ண ராஜபுரம், ராஜாஜி நகர், மெஜஸ்டிக், ஹெப்பால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மாலை 7 மணி வரை கொட்டிய மழையால் ஆங்காங்கே சாலையோர மரங்களும் மின் கம்பங்களும் சாய்ந்தன.

சுவர் இடிந்து விபத்து

இந்த நிலையில் தீடிரென்று பெய்த கனமழையால் சிவாஜி நகரில் உள்ள பழமையான‌ பவுரிங் மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் சாலையோர கடைக்காரர்களும், மழைக்கு ஒதுங்கியவர்களும் சிக்கிக் கொண்டனர்.

விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

இந்த எதிர்பாராத விபத்தில் ஒரு குழந்தை உட்பட 7 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

பிரதமர் இரங்கல்

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு பௌரிங் மருத்துவமனையின் சுவா் இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

நிவாரணம் அறிவிப்பு

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

முதல்வர் சித்தராமையா இரங்கல்

முதல்வர் சித்தராமையா மழை பெய்து கொண்டிருந்தபோதே சம்பவ இடத்தை பார்வையிட்டதுடன் , மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் உரிய நிவாரணம் அறிவிக்கப்படும் துன்று தெரிவித்தார்.

==============