Additional Subsidy of ₹4,317 Crore for Kharif Season Fertilizers: Decision Taken at Union Cabinet Meeting  google
இந்தியா

காரீப் பருவ உரங்களுக்கு ரூ. 4317 கோடி கூடுதல் மானியம் : மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு; இந்த ஆண்டு கூடுதல் சலுகை!

2026ம் ஆண்டு காரீப் பருவத்துக்கு ஊட்டச்சத்து சார்ந்த மானியத் திட்டத்தின் கீழ் 28 வகையான உரங்களுக்கு மானியம் உயர்த்தப்பட்டுள்ளது.

Rohini

28 வகையான உரங்களுக்கு மானியம்

2026ம் ஆண்டு காரீப் பருவத்துக்கு ஊட்டச்சத்து சார்ந்த மானியத் திட்டத்தின் கீழ் 28 வகையான உரங்களுக்கு மானியமானது உயர்த்தப்படுவதாக நாடாளுமன்ற கூட தொடரில் உயர்த்தப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் அனுமதி

2026ம் ஆண்டு காரீப் பருவத்துக்கு ஊட்டச்சத்து சார்ந்த மானியத் திட்டத்தின் கீழ் ஒரு கிலோவிற்கு ரூ.47.32ஆகவும், பாஸ்பேட் மானியத்தை ஒரு கிலோவிற்கு ரூ.52.76ஆகவும் கந்தக மானியத்தை கிலோவிற்கு ரூ.3.16ஆகவும் உயர்த்தி வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது

இந்த ஆண்டு கூடுதல் மானியம்

2026ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரையிலான காலத்திற்கு பொருந்தக்கூடிய மானிய விதிகள் இதில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2025ம் ஆண்டு காரீப் பருவத்துடன் ஒப்பிடும்போது இந்த மானியம் ரூ.4,317கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

ராஜஸ்தான் எண்ணெய் சுத்திகரிப்புக்கான மானியம்

மேலும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ராஜஸ்தான் எண்ணெய் சுத்திகரிப்புக்கான மானியத்திற்கான செலவை உயர்த்த மானியம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி இத்திட்டத்தின் கீழ் செலவை ரூ.79,459கோடியாக உயர்த்தவும், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து கூடுதல் பங்கு மூலதன ஆதரவை பெறவும் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதர பிற ஒப்புதல்

அருணாச்சலப்பிரதேசத்தில் இரண்டு முக்கிய நீர்மின் திட்டங்களை கட்டமைப்பதற்காக மொத்தம் ரூ.40,150கோடி முதலீட்டிற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

காம்லே, கிரா டாடி, குருங் குமே மாவட்டங்களில் கமலா நீர்மின் திட்டத்தை கட்டமைப்பதற்காக ரூ.26,069.50கோடி முதலீட்டிற்கு அமைச்சரவையில் ஒப்புதலானது அளிக்கப்பட்டுள்ளது.