பிரதமர் வருகை தொடர்பாக பேசியது
Puducherry NDA Alliance : பிரதமர் வருகை தொடர்பாக பேசிய நிர்மல் குமார் சுரானா கூறியதாவது புதுச்சேரிக்கு வரும் மார்ச் 1-ம் தேதி மதியம் பிரதமர் மோடி வருகை தர இருப்பதாகவும் , அரசு முறை பயணமாக புதுவை வரும் அவருக்கு பாஜக சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் அமித் ஷா- முதல்வர் ரங்கசாமி சந்திப்பு
காரைக்காலுக்கு வந்த மத்திய அமைச்சர் அமித் ஷாவை முதல்வர் ரங்கசாமி சந்தித்து பேசிய போது என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியாக இருப்பதாகவும் தற்சமயம் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளன.
வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேசி வருவதாகவும் கூட்டணி தொகுதிகள் குறித்த முடிபு பிறகு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
புதுச்சேரி என்டிஏ கூட்டணியில் அதிமுக இல்லை
இது குறித்து பேசிய அவர் தமிழகத்தில்தான் என்டிஏ கூட்டணியில் அதிமுக உள்ளது. புதுச்சேரியில் தற்சமயம் அதிமுக இல்லை என்றும் அதைப்போல இது குறித்து முதல்வர் ரங்கசாமி ஏதும் சொல்லவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.