ANI
இந்தியா

விமான விபத்தில் 241 பேர் பலி : ஒருவர் உயிர் பிழைத்தார்

அகமதாபாத் விமான விபத்தில் 241 பேர் பலியானதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

Kannan

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு 242 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது.

மருத்துவ கல்லூரி விடுதி மீது மோதி விமானம் நொறுங்கியது. அப்போதும் பெரும் தீப் பிழம்பும், கரும்புகையும் எழுந்தது.

மீட்பு பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 241 பேர் பலியானது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர்கள்.

7 பேர் போர்ச்சுல், ஒருவர் கனடாவை சேர்ந்தவர்.

உயிர் தப்பிய ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

-----